

சென்னை
எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் ரூ.1.03 கோடியில் புதிய கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதை உயிரிப் படிவங்களை பாது காக்கும் நோக்கில், அரியலூரில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் ஏற்படுத்தப்படும் என்று மறைந்த முன் னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2012-ம் ஆண்டு அறிவித்தார். அதன்படி. அரியலூர் மாவட்டம், வாரணவாசியில் 54 ஹெக்டேர் பரப்பிலான புதை உயிரிப்படிவங்கள் கொண்ட நிலம் ஒதுக்கப்பட்டது. இதில், ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதை உயிரிப் படிவ அருங்காட்சியகத்தை முதல்வர் பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் ரூ.1 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நுழை வுச் சீட்டு விற்பனைக்கூடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அருங்காட்சியக வெளி யீடுகள் விற்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள காணொளி விளக்கக் கூடத்தையும் திறந்து வைத்தார்.
தொழிற்பயிற்சிக் கூடங்கள்
இதுதவிர, கலை பண்பாட்டுத் துறையின் கீழ், திருவண்ணாமலை, சமுத்திரம் கிராமத்தில் 424.44 சதுர மீட்டர் பரப்பில் ரூ.85 லட்சம் மதிப் பீட்டில் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. காஞ்சி புரம் மாவட்டம், மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரிக்கு ரூ. 2 கோடியே 55 லட்சத்தில் கருங்கல்லிலான சுற்றுச்சுவர், மாண வர்களுக்கான தங்கும் விடுதிக் கட்டிடம், இரண்டு தொழிற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
வால்வோ பேருந்து
சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவையை அளிக்கும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவி மூலம், ரூ.1 கோடியே 10 லட்சத்தில் வாங்கப்பட்ட 43 இருக்கைகளுடன் கூடிய புதிய வால்வோ குளிர்சாதன சொகுசுப் பேருந்து சேவையையும் முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், சேவூர் ராமச்சந் திரன், தலைமைச் செயலர் கே.சண் முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.