

சென்னை
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் டாஸ்மாக் பணி யாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருப் பரப்பள்ளியை அடுத்துள்ள பேட்டப் பனூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த ராஜாவை மர்ம நபர்கள் கடந்த புதன்கிழமை இரவு கொலை செய்து ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனை கண்டித்து டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியுசி) உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஒரு சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்கு நர் ஆர்.கிர்லோஷ்குமார் அலுவல கத்துக்கு எதிரில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆர்.கிர்லோஷ்குமார் பேச்சுவார்த் தைக்கு அழைத்தார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப் பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து, அனைவரும் பணிக்குத் திரும்பினர். மாலை 3.30 மணியில் இருந்து மூடப்பட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.
இதுதொடர்பாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க (ஏஐடியுசி) பொது செயலாளர் தன சேகரன் கூறும்போது, "டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர் களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். வசூல் செய்யும் பணத்தினை பாதுகாப்பாக வைப்பதற்கு பாதுகாப்பு பெட்ட கங்களை அமைக்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வைத்தோம். கோரிக்கைகள் அரசிடம் தெரிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று மேலாண்மை இயக்குநர் உறுதி யளித்தார். முதல்வரும் கொலை செய்யப்பட்ட ஊழியரின் குடும் பத்துக்கு நிவாரணம் அறிவித் துள்ளதால் போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் செல்ல முடிவு செய்துள்ளோம்” என்றார்.