அத்திவரதர் வைக்கப்படும் அறையை சுத்தமான நீரால் நிரப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க உள்ள அறை.
அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க உள்ள அறை.
Updated on
1 min read

சென்னை

அத்திவரதர் வைக்கப்படவுள்ள அனந்தசரஸ் குளத்தை முறையாக தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும் என மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண் மற்றும் நிரப்பப்படவுள்ள நீரின் தன்மை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘அனந்தசரஸ் குளத்தில் நிரப்பப்படவுள்ள நீரின் தன்மை குறித்து ஆக.19 அன்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றார்.

அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக் கறிஞர், ‘‘அத்திவரதர் வைக்கப் படும் இடத்தை நிரப்ப 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். குடிப்பதற்கு கூட தகுதியான தண்ணீர் என ஆய்வில் தெரி விக்கப்பட்ட பொற்றாமரைக் குளத்து நீருடன் சேர்த்து ஆழ்துளை கிணற்று நீரையும் உபயோகப் படுத்தலாம்’ என்றார்.

அப்போது நீதிபதி, ‘‘அனந்த சரஸ் குளத்தை சுத்தம் செய்ய சிஐஎஸ்எப் வீரர்களை ஏன் அனுப் பக் கூடாது’’ என கேள்வி எழுப்பி னார். அதற்கு உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் உள்ள சிஐஎஸ்எப் அதிகாரிகள் தரப்பில், அனந்தசரஸ் குளத்தை சுத்தம் செய்ய 50 முதல் 75 வீரர்களை அனுப்ப நாங்களும் தயாராக இருக்கிறோம். ‘பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் உடனே செல்கிறோம்’ என தெரிவிக்கப் பட்டது.

அப்போது அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.மகாராஜா, ‘‘அனந்தசரஸ் குளத்தை இத்தனை நாட்களாக அறநிலையத் துறை யுடன் சேர்ந்து உள்ளூர்வாசிகள் திறம்பட 90 சதவீத பணிகளை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். இன்னும் 10 சதவீத பணிகளை யும் இரவோடு, இரவாக முடிக்க அனைத்து வேலைகளும் நடந்து வருகின்றன. இப்பணிகளை கண் காணிக்க கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இறுதிகட்டப் பணிகளையும் நாங் களே முடித்துக்கொள்கிறோம். மேலும் சமீபத்தில் பெய்த மழை யின் காரணமாக அத்திவரதர் வைக் கப்படும் அறைக்குள் தானாகவே நீர் சுரந்து வருகிறது, என்றார்.

அதையேற்ற நீதிபதி, ‘நீங்களே அந்தக் குளத்தை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தால் நல்லது தான். சிஐஎஸ்எப் தேவையில்லை’ எனக் கூறினார். மேலும், அனந்த சரஸ் குளத்தில் அத்திவரதர் வைக் கப்படும் அறையை சுத்தமான தண்ணீரால் நிரப்ப வேண்டும். அதுபோல அனந்தசரஸ் குளத்தை எந்த தண்ணீரால் நிரப்ப வேண்டும் என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வரும் ஆக.19 அன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in