Published : 17 Aug 2019 06:51 AM
Last Updated : 17 Aug 2019 06:51 AM

48 நாட்களில் ஒரு கோடி பக்தர்கள் தரிசனம்; காஞ்சியில் அத்திவரதர் வைபவம் நிறைவு: இன்று அனந்தசரஸ் குளத்துக்குள் சயனிக்க செல்கிறார்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை ஒரு கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய் துள்ளனர். இன்று அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திவரதர் சயனிக்க உள்ளார்.

அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1 முதல் நடைபெறு கிறது. ஜூலை 31 வரை சயனக் கோலத்தில் காட்சி அளித்த அத்தி வரதர், ஆக. 1 முதல் நின்ற கோலத் தில் காட்சி அளித்து வந்தார். மொத்தம் 48 நாட்கள் நடை பெறும் இந்த வைபவத்தில் 47-ம் நாளான நேற்று வரை ஒரு கோடிக் கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, நேற்று இளஞ் சிவப்பு நிறப் பட்டாடை அணிந்து அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள்பாலித் தார். இன்று நிறைவு நாள் என்பதால் நேற்று அதிகமான கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பக்தர்கள் வருகை சீராகவே இருந் தது. நேற்று பொது தரிசனத்தில் வந்த பக்தர்கள் 3 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்துக்குள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். நேற்று ஒரே நாளில் சுமார் 4 லட்சம் பேர் காஞ்சி புரத்தில் குவிந்தனர்.

சிறப்பு தரிசனங்கள் ரத்து

அத்திவரதரை காண்பதற்காக விஐபி, விவிஐபி-க்களுக்கான சிறப்பு தரிசனங்கள் நேற்று முன்தினம் வரை அனுமதிக்கப்பட்டன. நேற்று முன் தினம் நண்பகல் 12 மணி முதல் விஐபி, விவிஐபி தரிசனங்கள் ரத்து செய் யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆடி கருட சேவை முடிந்த பிறகு இரவு நேரத்தில் விஐபி, விவிஐபி வழிகளில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நேற்று இந்தப் பகுதிகள் முழு வதும் அடைக்கப்பட்டன. கோயிலுக் குள் செல்லும் பணியாளர்கள் மேற்கு கோபுர வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர். இதனால் சிறப்பு தரிசன வழிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கோயிலின் வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி போன்ற இடங்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந் தது. வரிசைகளில் பக்தர்கள் சீராக தொடர்ந்து வந்துகொண்டே இருந்த னர். இதன் காரணமாக மேற்கு கோபுரத்தில் இருந்து வெளியேறும் பக்தர்கள் எண்ணிக்கையும் சீராகவே இருந்தது.

விழாவின் நிறைவு நாளான இன்று உரிய ஆகம விதிப்படி பூஜைகள் செய்து அத்திவரதரை நீருக்குள் வைக்க இருப்பதால் பொது தரிசன மும் ரத்து செய்யப்பட்டது.

சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்ட தால் நேற்று சிறப்பு தரிசனத்துக்கான வழி மூடப்பட்டது. அந்த வழியாக வந்த பக்தர்கள் கிழக்கு கோபுரம் வழி யாக திருப்பி அனுப்பப்பட்டனர். கோயில் பணியாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். எனி னும் மூடப்பட்ட அந்த சிறப்பு தரிசன வழியாக போலீஸார், அவரது குடும் பத்தினர் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் அனுமதியில்லாமல் உள்ளே சென்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

மனு தள்ளுபடி

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக் கக் கோரி உயர் நீதிமன்றத்தில் 2 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவற்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ‘கோயில் மரபு மற்றும் வழி பாட்டு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகமும், அரசும்தான் முடிவெடுக்க வேண்டும்’ எனக் கூறி நேற்று அந்த மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் இன் றோடு ஒரு மண்டலம் நிறைவடைவ தால், இன்று பிற்பகல் முதலே அத்தி வரதருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளதாகவும் மற்றும் தைல காப்பு சாற்றப்பட்டு, வருண யாகம் நடத்திய பின்பு அனந்த சரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்கச் செல்வார் எனவும் பட்டாச்சாரியர்கள் தெரிவித்துள்ளனர்.

சுத்தமான நீரால் நிரப்ப வேண்டும்

அத்திவரதர் வைக்கப்படவுள்ள அனந்தசரஸ் குளத்தை முறையாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட் டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீரின் தன்மை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கள் ஆய்வு செய்து அறிக்கை தாக் கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.

அதன்படி, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, ‘அனந்த சரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப் படும் அறையை சுத்தமான தண்ணீ ரால் நிரப்ப வேண்டும். அதுபோல அனந்தசரஸ் குளத்தை எந்த தண்ணீ ரால் நிரப்ப வேண்டும் என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வரும் ஆக. 19-ம் தேதி அறிக்கை தாக் கல் செய்ய வேண்டும்’ என உத்தர விட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இன்று மாலை..

இந்நிலையில் அத்திவரதர் சய னிக்க உள்ள அனந்தசரஸ் குளத்தை நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, ‘‘அத்திவரதர் நாளை (இன்று) மாலை அர்ச்சகர்கர்கள், பட்டர்கள், ஸ்தானிகர்கள் குறிக்கும் நேரத் தில் அனந்த சரஸ் குளத்தில் வைக்கப் படுவார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x