Published : 16 Aug 2019 09:36 AM
Last Updated : 16 Aug 2019 09:36 AM

போக்குவரத்து விதி மீறலுக்கு இனி ஏடிஎம் கார்டு மூலம் அபராதம்: மதுரையில் முதன் முறையாக அமல்

புதிய டிஜிட்டல் கருவியுடன் போக்குவரத்து எஸ்ஐ.

என்.சன்னாசி

மதுரை

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோரிடம் அந்த இடத்தி லேயே அபராதம் வசூலித்து ரசீது வழங்குவது நடைமுறையில் இருந்தது.

இதை மாற்றி நவீன டிஜிட்டல் இ- சலான் கருவி மூலம் விதிமீறலுக்கு அபராதத் தொகை வசூலிக்கும் முறை தமிழக காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் கருவி காவல்து றை, நீதிமன்றம், வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் மற்றும் அரசின் பொது இணைய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதியை மீறுவோரிடம் இனிமேல் காவல்து றையினர் கையில் பணம் பெற்று ரசீது தரக் கூடாது. ஏடிஎம், கடன் அட்டைகள் மூலமே அபராதத் தொகையை வசூலிக்க வேண்டும். இதற்கான ரசீதும் உடனே வழங்கப்படும். ஏடிஎம் கார்டு இல்லாதவர்கள் எலக்ட்ரானிக்ஸ் ரசீதை பெற்று குறிப்பிட்ட நாட்களுக்குள் தபால் நிலையம், எஸ்பிஐ வங்கி, இ-சேவை மையம் அல்லது நீதிமன்றத்தில் அபராதத் தொகையைச் செலுத்தலாம்.

மதுரை நகருக்கு கேமராவுடன் கூடிய 32 டிஜிட்டல் இ- சலான் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி போலீஸார் நேற்று முதல் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்கத் தொடங்கினர்.

இது குறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியது:

விதிமீறலின்போது அபராதம் வசூலித்தால் காவல்துறையினர் மீதே சந்தேகம் எழுகிறது. நீண்ட நேரம் காக்க வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக ஏடிஎம் கார்டு, கடன் அட்டை மூலம் அபராதம் வசூலிக்கப்படும். ஏடிஎம் கார்டு இல்லாதோர் அபராத ரசீதை போலீஸாரிடம் பெற்று இ-சேவை மையங்களில் 3 மாதங்களுக்குள் செலுத்தலாம். அபராதம் செலுத்தவில்லை எனில் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும். மேலும் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் மின் கட்டணங்கள் செலுத்துவது போன்ற பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் முடக்கப்படும். இதுதவிர, ரேஷன் கார்டு ரத்து நடவடிக்கைக்கும் உள்ளாக வேண்டி இருக்கும்.

மது போதையில் சிக்குவோரின் வாகனத்தைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். பிற விதிமீறல்களுக்கு கார்டு மூலம் அபராதம் வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. தல்லாகுளம், தெப்பக்குளம், கூடல்புதூர், எஸ்எஸ். காலனி, கரிமேடு, திலகர்திடல், அண்ணாநகர் காவல் நிலையங்களுக்கு தலா ஒரு கருவி வீதம் 7-ம், 10 போக்குவரத்து காவல் நிலையங்களில் பணியாற் றும் 25 எஸ்ஐகளுக்கு 25 கருவி கள் என மொத்தம் 32 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மதுரையில் முதன் முதலில் அறிமுகமாகியுள்ள இத்திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும், என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x