

க.ரமேஷ்
கடலூர்
பருவ காலங்களில் கிடைக்கும் மழைநீரை சேமித்து வைத்து, அதை வருடம் முழுவதும் பயன் படுத்தி விவசாயம் மற்றும் குடி நீர் தேவையில் தன்னிறைவு பெற்று, உணவு உற்பத்தியில் உயர்வடைந்த வர்கள் பண்டையத் தமிழர்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் னரே தமிழர்கள் நீர் மேலாண் மையை அறிந்திருந்தனர்.
அதில் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள பழங்கால மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு. இக் கோயில் சுமார் 51 ஏக்கர் பரப்பளவை கொண்டது. கோயிலின் உட்பகுதி யில் விழும் மழைநீர் முழுவதையும் சேமிக்க வேண்டும் என்று கருதி கோயில் கட்டுமானம் வடிவமைக் கப்பட்டுள்ளது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலின் வடகிழக்கு பகுதியில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் உருவாக் கப்பட்ட திருப்பாற்கடல் என்ற குளம் தமிழக அரசால் தூர்வாரப்பட்டது. அப்போது குளத்தின் தெற்கு பகுதியில் ஒரு கால்வாய் இணைக் கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து அப்பகுதியில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், நான்கு அடி உயரம், இரண்டு அடி அகலம் கொண்ட இக்கால்வாய் முற்றிலும் செங்கற்களால் கட்டப்பட்டு நீள் செவ்வக வடிவ கருங்கல் பலகையால் மூடப்பட்டு இருந்தது.
இக்கால்வாய் குளத்தின் மேற்குப்பகுதி வழியாக வடக்கு நோக்கிச் செல்லும் பிரதான கால்வாயோடு இணைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டு, கால் வாய் முழுவதும் தூய்மைப் படுத்தப்பட்டது.
மழைநீரை சேகரிக்கும் வகை யில் அமைக்கப்பட்ட இக்கால்வாய் சிதம்பரம் நடராஜர் கோயிலின் வடக்கு பகுதியில் உள்ள யானைக் கால் மண்டபத்தின் அருகே தொடங்கி சுமார் 2,200 மீட்டர் வரை பூமிக்கடியில் வடக்கு நோக்கிச் சென்று திருப்பாற்கடல் மற்றும் தில்லை காளிக் கோயில் முன்பாக உள்ள சிவப்பிரியை குளத்தையும் இணைப்பதாக உள்ளது.
இக்கால்வாய் 65 செ.மீ. அகல மும், 77 செ.மீ. ஆழமும் கொண்ட தாகும். இந்த நிலவறைக் கால்வாய் வழியாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் விழும் மொத்த மழை நீரையும் இந்த 2 குளங்களிலும் சேமித்துள்ளனர். இக்கால்வாய் மூலம் கோயில் வளாகத்தில் மழை நீர் தேங்குவது நிரந்தரமாக தடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ஜே.ஆர்.சிவ ராமகிருஷ்ணன் கூறும்போது, “நடராஜர் கோயிலில் அமைக்கப் பட்டுள்ள இந்த நிலவறைக் கால் வாய் தரைமட்டத்தில் இருந்து 30 செ.மீ. அளவில் தொடங்கி சிவப் பிரியை குளத்தில் முடியும்போது 200 செ.மீ. ஆழத்தில் உள்ளது.
அதாவது கால்வாய் சாய்தள அமைப்பில் செல்கிறது. இதனால் கால்வாய் வழியாக செல்லும் மழைநீர் நேராக குளத்தை அடைவது எளிதாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமானத்தின் தொழில்நுட்பக் கூறுகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் இக்கால்வாயின் காலம் கி.பி.11-12-ம் நூற்றாண்டு என குறிப்பிட்டுள்ளனர்” என்றார்.கால்வாய் சாய்தள அமைப்பில் செல்கிறது. இதனால் கால்வாய் வழியாக செல்லும் மழைநீர் நேராக குளத்தை அடைவது எளிதாக்கப்பட்டுள்ளது.