Published : 16 Aug 2019 07:40 AM
Last Updated : 16 Aug 2019 07:40 AM

பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நம் நாட்டில் திட்டங்கள் அமலாக்கத்தில் வெளிப்படை தன்மை வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பேசுகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

சென்னை

பல்வேறு வகையான கலாச்சாரங் களை பின்பற்றும் மக்களைக் கொண்ட நம் நாட்டில் கொள்கை மற்றும் திட்டங்களை அமலாக்கும் போது வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஆளுநரின் செயலர் ராஜகோபால் பங்கேற்றார். தொடர்ந்து, நேற்று மாலை தேநீர் விருந்து நிகழ்ச்சி நடந்தது.

இதில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பேரவைத் தலைவர் பி.தனபால், அமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏக்கள், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, பாஜக மூத்தத் தலை வர் இல.கணேசன் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்ற னர்.

நிகழ்ச்சியில் ஆளுநர் பேசிய தாவது: இந்தியா இன்று உலக நாடுகளில் பெருமைமிக்கதாக திகழ் கிறது. உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இளைய தலைமுறையினர் அதிகளவில் இருப்பதன் பயனை அறுவடை செய்யும் தருணமாகவும் தற் போதைய சூழல் உள்ளது. சமூக ஒற்றுமை, ஆழ்ந்த கலாச்சார வேர் கள் மற்றும் அரசியல் பொரு ளாதார நிலைத்தன்மையுடன் திகழ் வதால் இந்தியா உலகளவில் மதிக்கப்படுகிறது.

இந்த நேரத்தில், மிகவும் அமைதி யான முறையில், நீண்ட போராட் டத்தின் மூலம் பெரிய தியாகங்களை செய்து சுதந்திரத்தை பெற்றுத்தந்த தியாகிகளுக்கு கடன்பட்டுள்ளோம். அப்போது இருந்த ஏகாதிபத்திய அரசு, வன்முறையில்லாமல் போராட்டம் நடத்தியவர்கள் மீது இரக்கமில்லாமல் தடியடி, துப்பாக்கிச் சூடுகளை நடத்தியது. இந்தியர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர். இங்கு எந்த ஒரு கொள்கையையும் உருவாக்கு வதற்கான திட்டம் இல்லாமல் இருந் தது. ஆனால் சுதந்திரம் இவை அனைத்தையும் மாற்றிவிட்டது.

கடுமையாக போராடி பெற்ற சுதந்திரத்தின் பயனை மக்கள் அனை வரும் பெறச் செய்ய வேண்டும். குறிப்பாக வறுமை ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டும். கல்வி வாய்ப்புகள் அனைவருக்கும் தாராளமாக கிடைக்க வேண்டும்.

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மக்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும். சமூகத்தில் நீதியும் நேர்மையும் நிலவுவதுடன், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் உண்மையான பயனை மக்கள் உணர வேண்டும்.

நாம் நமக்கு முதலில் உண்மை யாக நடந்து கொண்டு நாட்டுக்கும் உண்மையாக நடக்க வேண்டும். நாடு என்பது பெரிய குடும்பம் நாம் எல்லாம் அதன் அறங்காவலர்கள். பலவகையான கலாசாரங்களை கொண்ட மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்டது நம் நாடு.

எனவே, கொள்கை மற்றும் திட்டங்களை அமல்படுத்தும்போது வெளிப்படையாக இருக்க வேண் டும். அப்போதுதான் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் சென்று சேரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஷசாங்க் சுப்பிரமணியனின் புல்லாங் குழலிசை, பார்வதி ரவி கண்ட சாலா, ரேவதி முத்துசாமி ஆகியோரின் பரதநாட்டியம், நெம்மாரா சகோதரர்களான கண்ணன், ஆனந்த்தின் நாதஸ் வரம், என்.ரவிகிரணின் சித்திர வீணை இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இடையிடையே நாட்டுப்பற்றை உணர்த்தும் பாடல்களும் இசைக் கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x