

சென்னை
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தென் தமிழகத்தின் உள் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் அந்தமான் கடல் பகுதியில் பருவக்காற்று கால காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி, தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது.
மத்திய பிரதேசத்தின் வடமேற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய உத்தரப்பிரதேச மாநிலத்தின் தெற்கு பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.
இது மேலும் வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். அப்போது தமிழகம் நோக்கி தென்மேற்கு பருவக் காற்று செல்லும். இக்காரணங்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 மற்றும் 18-ம் தேதிகளில் பரவ லாக கனமழை பெய்ய வாய்ப் புள்ளது.
அதிகபட்சமாக 9 செ.மீ.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 9 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 7 செ.மீ., திருத்தணி, சோழவரம், திருவாலங் காடு, வேலூர் மாவட்டம் அரக் கோணம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., கோவை மாவட் டம் சின்னகள்ளாரில் 5 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் செங்குன் றத்தில் 4 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.