

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசன விழாவில் அத்திவரதரை தரி சிக்க நன்கொடையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. இந்த நுழைவுச் சீட்டுக்கான தரிசனம் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டதால், நுழைவுச் சீட்டு பெற்ற அனைவரும் ரங்கராஜ தெரு மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதி முழுவதும் திரண்டனர்.
நெரிசல் அதிகம் இருந்ததால், அப்பகுதி மக்கள் நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள புதர்களின் வழியாக அடுத்த தெருக்களுக்கும், தங்கள் வீடுகளுக்கும் அவர்கள் சென்றனர். இதேபோல் வரதராஜப் பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள பெரும் பகுதிகள் மனித தலை களால் நிரம்பி இருந்தன. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.