Published : 15 Aug 2019 10:59 AM
Last Updated : 15 Aug 2019 10:59 AM

தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அதிகாரிகளின் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

கிராம நிர்வாக அலுவலர்களின் சொத்து விவரங்களை சேகரிக்கவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச் சுழியைச் சேர்ந்தவர் ஏ.காளீஸ்வரி. இவர், முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் அரசு ஊழியரான அம்பேத்கர் (இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்தவர்) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

அம்பேத்கர், பணியின்போது உயிரிழந்த நிலையில், கருணை வேலை கேட்டு காளீஸ்வரி அதிகாரிகளிடம் மனு அளித்தார். இவருக்கு கருணை வேலை வழங்க அம்பேத்கருக்கும், அவரது முதல் மனைவிக்கும் பிறந்த மகள் ஆட்சேபம் தெரிவித்தார்.

இதனால் காளீஸ்வரி கருணை வேலை கேட்டு அளித்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை ரத்து செய்து தனக்கு கருணை வேலை வழங்க உத்தரவிடக்கோரி காளீஸ்வரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய் தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் அரசு ஊழியரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ஆனால் முதல் கணவரும், மனுதாரரும் விவாகரத்து செய்து கொள்வதாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தைப் பதிவு செய்து ஏ.லெட்சுமிபுரம் கிராம நிர்வாக அலுவலர், இரண்டாவது திருமணத்துக்கு சான்றிதழ் வழங்கி உள்ளார். இதுபோன்ற சான்றிதழ் வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் கிடை யாது.

கிராம நிர்வாக அலுவலர்கள் அதிக அளவில் லஞ்சப் புகார்களை சந்திக்கின்றனர். தகன மேடையில் உடல் கிடத்தப்பட்டிருக்கும் நிலையி லும் இறப்பு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்சம் கேட்கின்றனர். தகுதியற்றவர்கள் அரசின் நலத்திட்டங்களை பெற போலியாக சான்றிதழ் வழங்கு கின்றனர்.

பணியில் மெத்தனம், வருமானத் துக்கு அதிகமாக சொத்து குவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்கள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு ஊழியர்கள் ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு விதிகளில் உரிய திருத் தம் கொண்டு வர விதிக் குழுவை அரசு அமைக்க வேண்டும்.

வட்டாட்சியர் அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற் கொள்வது தொடர்பாக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்களின் சொத்து விவரங்களை சரி பார்க்கவும், வருமானத்துக்கு அதிக மாக சொத்து குவித்தது தெரிய வந்தால் அதை அவர்களின் பணிப் பதிவேட்டில் குறிப்பிடவும், அவர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வும், கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகளை தெரிவிக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தர விட வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலகங் களில் பொதுமக்களுக்கு வழங்கப் படும் அனைத்து சான்றிதழ்களை யும் தனி பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க உத்தரவிட வேண்டும். சட்டப்படி விவாகரத்து பெறாத மனுதாரரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x