Published : 15 Aug 2019 10:54 AM
Last Updated : 15 Aug 2019 10:54 AM

போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.154 கோடி மதிப்பில் 500 புதிய பேருந்துகள்: முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை பொது மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் பழனிசாமி நேற்று கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் 8 மண்டல போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் சராசரியாக 1 கோடியே 74 லட்சம் பயணிகள் பயன்பெற்று வருகின்றனர்.

5 ஆயிரம் பேருந்துகள் வாங்க...

பொதுமக்களின் போக்குவரத் துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அவ்வப்போது புதிய பேருந்துகள் இயக்கத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் போக்குவரத்துத் துறை சார்பில், 2 கட்டங்களாக ரூ.1,500 கோடி மதிப்பில், 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் ரூ.1,180 கோடி செலவில், 3 ஆயி ரத்து 881 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, மேலும் 500 புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைக்கும் வகையில் 7 பேருந்துகளை, முதல்வர் பழனி சாமி கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்துக்கு 235, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத் துக்கு 118, அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் - 18, சேலம் - 60, கோவை - 16, கும்பகோணம் - 25, மதுரை - 14, நெல்லை - 14 என்ற எண்ணிக்கையில் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், துணை முதல் வர் ஓ.பன்னீ்ர்செல்வம், போக்கு வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செய லர் கே.சண்முகம், போக்குவரத் துத் துறை செயலர் ராதாகிருஷ் ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நவீன வசதிகள்

இந்த புதிய பேருந்துகள் முற்றிலும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் அகில இந்திய மோட்டார் வாகன தரக்கட்டுப்பாட்டு மையத் தின் பரிந்துரைகள்படி வடிவமைக் கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மாநகரப் பேருந்து களில் பயணிகள் எளிதில் ஏறி இறங்கிட ஏதுவாக தானியங்கி கதவுகளுடன் கூடிய அகலமான தாழ்தள படிக்கட்டுகள் அமைக் கப்பட்டுள்ளன. இருபுறமும் அவசர கால வழிகள், பயணிகள் இறங்கும் இடத்தை அறிவிக்கும் ஒலிபெருக்கி வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கைகள், அவர்கள் இறங்கும் இடத்தை தெரிவிக்க ஒலி அழைப்பான் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வழித்தடத்தை எளிதில் அறிந்திட மின்னணு (எல்இடி) வழித்தட பலகைகள், ஓட்டுநருக்கு மின் விசிறி, பேருந்து பின்னோக்கி வரு வதை அறிவித்திட ஒலி எச்ச ரிக்கை கருவி ஆகியவை பொருத் தப்பட்டுள்ளன. அரசு விரைவு பேருந்துகளில் இருக்கை மற்றும் படுக்கை வசதி, கழிப்பறை வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x