Published : 15 Aug 2019 10:49 AM
Last Updated : 15 Aug 2019 10:49 AM

உடனடி நிவாரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை

நீலகிரி மாவட்டத்துக்கு உடனடி நிவாரணமாக ரூபாய் 30 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியி லிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிப்புகள் தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அளிப் பது குறித்து முதல்வர் பழனி சாமி தலைமையி்ல் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அதன்பின், முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் 6-ம் தேதி முதல், 10-ம் தேதி வரை பெய்த கனமழை காரணமாக, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. உடனடியாக மீட்பு மற்றும் நிவா ரண பணிகளில் முழுவீச்சில் ஈடுபட மாவட்ட நிர்வாகத்துக்கு நான் உத்தரவிட்டேன். வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதய குமார், வருவாய் நிர்வாக ஆணை யர் கே.சத்யகோபால் ஆகியோர் உடனடியாக நீலகிரி சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினர்.

இந்நிலையில் இன்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில், பாதிக்கப் பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப் பட்டு 67 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, 6 ஆயி ரத்து 910 பேருக்கு முறையாக உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். உரிய மருத் துவ வசதிகள் செய்யப்பட வேண் டும். உயிரிழந்த 5 பேரின் குடும் பத்துக்கு வழங்கப்பட்டதைப் போல், ரூ.10 லட்சம் காட்டுக் குப்பை, நஞ்சநாட்டை சேர்ந்த சஜீவ் என்பவர் குடும்பத்துக்கும் வழங்கப்படும்.

காயமடைந்த 11 பேர் மற்றும் 2 கால்நடைகள் இழப்புக்கும் பேரி டர் நிவாரண நிதியில் இருந்து உட னடியாக நிவாரணம் வழங்கப் படும். பகுதியாக சேதமடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 100-ம், முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும் உடனடி நிவார ணமாக வழங்கப்படும். முழுமை யாக சேதமடைந்த குடிசை களுக்கு மாற்றாக பசுமை வீடு கள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.

சேதமடைந்த தோட்டக்கலைப் பயிர்கள் குறித்த கணக்கெடுப்பை ஆகஸ்ட் 16-க்குள் முடித்து இடுபொருள் மானியம் வழங்க அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க தேவைப் படும் நிதி குறித்த முன்மொழிவு களை விரைவாக மத்திய அரசுக்கு அனுப்ப, சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

மேலும், நீலகிரி மாவட்டத் துக்கு உடனடி நிவாரணத்திற்காக ரூபாய் 30 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x