

சென்னை,
வெளிநாடுகளில் நடைபெற்ற வாள்சண்டை மற்றும் தொடர் ஓட்ட போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். மேலும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் ரூ.6 கோடியே 69 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதையையும் திறந்துவைத்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் ரூ.6 கோடியே 69 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் மின் விளக்குகள், நீர் தெளிப்பான்கள் மற்றும் வடிகால் அமைப்பு போன்ற வசதிகளுடன்கூடிய செயற்கை இழை ஓடுதளப்பாதையை முதல் வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
சிறப்பு விளையாட்டு விடுதி
கோவில்பட்டியில் வளைகோல் பயிற்சி பெறும் கல்லூரி மாணவர்களுக்காக ரூ.1 கோடியே 13 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சிறப்பு விளையாட்டு விடுதிக் கட்டிடம், புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் ரூ.55 லட்சத் தில் கட்டப்பட்டுள்ள மாணவியருக் கான விளையாட்டு விடுதிக் கட்டி டம், மதுரை மாவட்ட விளையாட் டரங்கில் உள்ள விளையாட்டு விடுதிக் கட்டிடத்தில் ரூ.97 லட்சத் தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விடுதிக் கட்டிடம் என மொத்தம் ரூ.9 கோடியே 35 லட்சத்தில் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களையும் முதல் வர் திறந்துவைத்தார்.
ஆஸ்திரேலியாவில் நடை பெற்ற காமன்வெல்த் சீனியர் மற்றும் வெட்ரன் வாள்சண்டை போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சி.ஏ.பவானிதேவி, கே.பி.ஜிஷோ நிதி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.20 லட்சத்துக்கான காசோலைகளையும், கத்தார் நாட் டில் நடைபெற்ற தடகள வாகை யர் போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் கலப்புப் பிரிவில் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ஆரோக்கிய ராஜீ வுக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.