இன்று 73-வது சுதந்திர தின விழா: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

இன்று 73-வது சுதந்திர தின விழா: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
Updated on
2 min read

சென்னை

இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:

ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஆழ்ந்து வேரூன்றியுள்ள கலாச்சாரம், சமூக பிணைப்பு ஆகியவற்றுக்கு உலக நாடுகள் மதிப்பளித்து வருகின்றன. நம் நாடு விடுதலை பெற, பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களின் பங்களிப்பையும், தியாகத்தையும், இந்த சுதந்திர தினத்தில் நினைவு கூர்வோம்.

முதல்வர் பழனிசாமி: தன்னல மற்ற தியாகிகள் அரும்பாடுபட்டு போராடிப் பெற்றுத்தந்த சுதந்தி ரத்தை போற்றி பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும். தமிழக மக்கள் சாதி, மத, பேதங்களை களைந்து, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து இந்தி யாவை வல்லரசாகவும், தமிழ கத்தை முதன்மை மாநிலமாகவும் உயர்த்த உறுதியேற்போம்.

பாமக தலைவர் ராமதாஸ்: இந்தி யாவில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை ஒழிக்க வும், அமைதி, வளம், செழிப்பு, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகிய வற்றை பெருக்கவும் உறுதியேற் போம்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: வறுமை யில்லாமல் வாழ்வதற்கு வகை செய்யும் சுதந்திர தினமாக இந்த சுதந்திர தினம் அமையட்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்: ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி ஆகிய மாண்புகளையும், மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை போன்ற நம் தேசத்தின் உள்ளார்ந்த மரபுகளையும் உயர்த்திப்பிடிக்க பெற்ற சுதந்திரத்தை பேணிப் பாதுகாத்திட வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் தினகரன்: நம்முடைய உரிமைகளை காத்து நின்று தமிழனாக, இந்திய னாக தலைநிமிர்ந்து வாழ்ந்திட விடு தலைத் திருநாளில் உறுதி ஏற்போம்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: மதுவை ஒழித்து, மனித நேயத்தை வளர்த் தெடுக்கும் நாள்தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடு தலை நாள் ஆகும். அந்த இலக்கை நோக்கி பயணிக்கவும், அதற்காக கடுமையாக உழைக்கவும் அனைவரும் உறுதியேற்போம்.

கொமதேக பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: இந்த சுதந்திர தினத்தில் இயற்கைக்கு சுதந்தி ரத்தை கொடுத்து நாமும் சுதந் திரத்தை அனுபவிக்க உறுதிமொழி எடுப்போம்.

ஐஜேகே தலைவர் பாரிவேந்தர்: மிகச்சிறந்த வலிமையும் வளமையும் கொண்ட நாடாக இந்தியா திகழ பாடுபடுவோம்.

மமக தலைவர் எம்.எச்.ஜவா ஹிருல்லா: மிகப்பெரிய தியாகத் துக்கு பிறகு பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கத் தனிநபர் உரிமை, மாநில உரிமை, நாட்டில் வாழக் கூடிய பல்வேறு மத, இன, மொழி, கலாச்சார, பண்பாடு போன்ற உரி மைகளைப் பாதுகாக்க உறுதியேற் போம்.

சமக தலைவர் சரத்குமார்: நாடு முழுவதும் அமைதி, ஒற்றுமை, சமத்துவம் நிலைத்து, சகோதரத் துவம் தழைக்க பாடுபடுவோம்.

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலர் மு.தமிமுன் அன் சாரி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ் நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, சமத்துவ மக்கள் கழகத் தலைவர் ஏ.நாரா யணன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் ந.சேதுராமன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தி.தேவநாதன் யாதவ் உள்ளிட்ட பலர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in