Published : 15 Aug 2019 09:57 AM
Last Updated : 15 Aug 2019 09:57 AM

வருமானவரி சோதனை தமிழகத்தில்தான் அதிகம்: வருமானவரித் துறை ஆணையர் தகவல்

சென்னை:

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு வருமானவரி சோதனை நடைபெறுகிறது என வருமானவரித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை யில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வருமான வரி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான ஆலோ சனை கருத்தரங்கம் நேற்று நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல் வர் டாக்டர் என்.ராமலஷ்மி தலைமை வகித்தார். கல்லூரியின் வணிகவியல் துறையின் தலை வரும், உதவிப் பேராசிரியரு மான டாக்டர் ஹேமா ஜோ வர வேற்றார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக் கான வருமானவரித் துறை ஆணை யர் (நிர்வாகம்) என்.ரங்கராஜ், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:

அரசாங்கம் நமக்கு செய்து தரும் அடிப்படை வசதிகளான சாலை, போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்டவற்றுக்கு நாம் செலுத்தும் சேவைக் கட்டணம்தான் வருமான வரி. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் வந்தால் அதற்கு நாம் வரி செலுத்த வேண்டும். வசூலிக்கப்படும் வரியில் 85 சத வீதம் தொகை அந்தந்த மாநிலங் களுக்கு திருப்பி அளிக்கப்படு கிறது. 15 சதவீத வரித் தொகையை மட்டுமே மத்திய அரசாங்கம் வைத்துக் கொள்கிறது.

350 வரி சோதனைகள்

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு வருமானவரித் துறை சோதனை நடைபெறுகிறது. நான் மட்டுமே, 350 வருமானவரி சோதனைகளை நடத்தி ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி வசூலித்துள்ளேன்.

கடந்த ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 500 பேரில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 20 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வெற்றி பெற்று அரசு வேலைகளில் சேர வேண்டும்.

இவ்வாறு ரங்கராஜ் கூறினார்.

நிகழ்ச்சியில், வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் டாக்டர் அமல் பி.கீர்த்தனே, உதவி ஆணை யர் டி.பாலச்சந்தர், ஆய்வாளர் மனோரஞ்சிதம், வருமானவரித் துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x