Published : 15 Aug 2019 08:34 AM
Last Updated : 15 Aug 2019 08:34 AM

உணவுக் கழிவுகளில் இருந்து எரிவாயு எடுக்க நடவடிக்கை: சென்னை மாநகராட்சி சார்பில் 10 இடங்களில் மையங்கள் அமைகிறது

சென்னை

சென்னை மாநகராட்சி சார்பில் 10 இடங்களில் உணவுக் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சியில் தினமும் 5,400 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. அவை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியைச் சுற்றி பல்வேறு சுகாதார சீர்கேடுகளும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

தற்போது மக்கும் குப்பை கள் 176 மையங்களில் இயற்கை உரமாகவும் எரிவாயு வாகவும் மின்சக்தியாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினமும் குப்பைக் கொட்டும் வளாகங்களுக்குச் செல்லும் குப்பையின் அளவு சுமார் 4800 டன்களாக குறைந்துள்ளன.

மேலும் அதிக அளவு குப்பைகளை உற்பத்தி செய் யும் ஓட்டல்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளில் உருவாகும் உணவுக் கழிவுகள், சமைய லறைக் கழிவுகள் ஆகிய வற்றை, அவர்களின் சொந்த இடத்திலேயே இயற்கை உர மாகவோ, எரிவாயுவாகவோ மாற்ற வேண்டும் என்று மாநக ராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. அவர்களுக்கு போதிய இடம் இல்லாத நிலை குறித்து மாநகராட்சி நிர்வா கத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உணவுக் கழிவு, சமையலறைக் கழிவு கள், காய்கறிக் கழிவுகள் உள் ளிட்ட ஈரக் கழிவுகளில் இருந்து நெருக்கப்பட்ட இயற்கை எரி வாயு (சிஎன்ஜி) உற்பத்தி செய் யும் மையங்களை, மாநகராட்சி இடங்களில் தனியார் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக மாநக ராட்சி அதிகாரிகள் கூறிய தாவது:

மாநகராட்சியில் உற்பத்தி யாகும் மொத்த குப்பைகளில் 45 சதவீதம் உணவு மற்றும் காய்கறி கழிவுகளாக உள்ளன. முதற்கட்டமாக ஓட்டல்களில் உருவாகும் உணவு மற்றும் காய்கறிக் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கும் மையத்தை, சேத்துப்பட்டில் உள்ள மத்திய தார் கலவை நிலையத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க தனியார் செலவில் அமைக்கப் பட்டு, அதன் செலவிலேயே பராமரிக்கப்பட உள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படும் எரிவாயு, வாகன எரிபொருளா கவும் சமையல் எரிவாயுவாக வும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது.

அதில் கிடைக்கும் வருவா யில் ஒரு பகுதி மாநகராட்சிக்கு கிடைக்கும். இந்த மையத்தில் நாளொன்றுக்கு 50 முதல் 65 டன்கள் வரை உணவு உள்ளிட்ட ஈரக் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்க முடியும். அதிலிருந்து வெளி யேறும் கழிவுகளில் இருந்து இயற்கை உரமும் கிடைக்கும்.

இதேபோன்று பள்ளிக் கரணை, கொடுங்கையூர், சோழிங்கநல்லூர் ஆகிய இடங் களில் 8 மையங்கள் அமைக்கப் பட உள்ளன. மேலும் வளசர வாக்கம் மண்டலம் திருமழிசை பகுதியிலும் ஒரு மையம் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு 10 இடங்களில் அமைக்கப்படும் எரிவாயு மையங்கள் மூலம், தினமும் 500 டன் கழிவுகள் குப்பைக் கொட்டும் வளாகங்களுக்குச் செல்வது குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x