

சென்னையில் நேற்று மாலை பெய்த சாரல் மழையால் மாநகரம் முழுவதும் குளிர்ந்தது.
சென்னையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழை பெய்யவில்லை. வெயிலும், மேகமூட்டமுமாக இருந்து வந்தது. இந்நிலையில் சென்னை யில் நேற்று பகல் முழுவதும் கடும் வெப்பம் நிலவியது. நேற்று நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி இருந்தது. மாலை நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக கருமேகம் சூழ்ந்து லேசான சாரல் மழை தொடங்கியது. இந்த சாரல் மழை இரவு 8 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக மாநகரம் முழுவது குளிர்ந்த சூழல் நிலவியது.