Published : 14 Aug 2019 05:00 PM
Last Updated : 14 Aug 2019 05:00 PM

அத்திவரதர் தரிசனம் நிறைவு: அடுத்த நிகழ்வு என்ன? - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பேட்டி

அத்திவரதர் தரிசனம் நிறைவடைவதை ஒட்டி அடுத்த நிகழ்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 16-ம் தேதி மாலையுடன் தரிசனம் முழுமையாக நிறுத்தப்படுவதாக தெரிவித்தார்.

செய்தியாளர்களுக்கு ஆட்சியர் பொன்னையா அளித்த பேட்டி:

“ஆடிகருட சேவை என தரிசன சேவை குறைக்கப்படும் என ஏற்கெனவே தெரிவித்த அடிப்படையில் நாளைய தினம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தரிசனம் நிறுத்தி பின்னர் தொடரப்படும்.

அதன்படி கிழக்குக் கோபுர வாசல் 12 மணி அளவில் மூடப்படும். அப்போது உள்ளே இருக்கும் பக்தர்கள் தரிசித்துவிட்டு வெளியேச்செல்ல ஏற்பாடு செய்யப்படும். 4 மணிமுதல் ஆடி கருடச்சேவை தொடங்கும். 8 மணிக்கு ஆடிக்கருடச்சேவை முடியும். 8 மணிக்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

12 மணிக்கு கதவுகள் மூடப்படும். அதன்பின்னர் தொடர்ந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே முதல்வர் அறிவித்தப்படி 16 மற்றும் 17-ம் தேதிகளில் விஐபி, விவிஐபி தரிசனம் கிடையாது. 16-ம் தேதி மாலையுடன் தரிசனம் முழுமையாக நிறைவேறும். முழுமைப்பெறும்.

17-ம் தேதி தரிசனம் விவிஐபி, விஐபி தரிசனம் எதுவும் கிடையாது. 17-ம் தேதி அத்திவரதர் அவருடைய இருப்பிடமான அனந்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்படும். 17-ம் தேதி மாலை அல்லது இரவு அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திற்குள் உள்ள கோபுரத்தில் வைக்கப்படுவார்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் அளித்த பதில்:

அத்திவரதர் தரிசனம் 10 நாட்கள் நீட்டிப்பு இல்லையா?

உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துவிட்டதை செய்தியில் பார்த்திருப்பீர்கள். ஆகவே எதுவும் இல்லை.

17-ம் தேதி மூலவரை தரிசிக்க அனுமதி உண்டா?

17-ம் தேதி அன்று ஆறுகால பூஜை நடக்கும், முழுமையாக சடங்குகள் நடப்பதால் அன்று அனுமதி இருக்காது. 18-ம் தேதியிலிருந்து அனுமதி இருக்கும்.

உயர் நீதிமன்றம் அரசுதான் அத்திவரதர் தரிசன நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கவேண்டும் என்று கூறி உள்ளது, அரசின் நிலைப்பாடு என்ன?

அரசின் நிலைப்பாடு நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார்கள். ஆகம விதிப்படி என்ன செய்யவேண்டுமோ அது செய்யப்படவேண்டும். அரசின் பணி பாதுகாப்பு மற்ற ஏற்பாடுகளை செய்துக்கொடுப்பது மட்டுமே. தரிசன காலக்கட்டத்தில் பாதுகாப்பு மட்டுமே அரசின் பணி.

விஐபி பாஸ் எப்போதுமுதல் நீக்கப்படுகிறது?

நாளை (15/8) 12 மணிக்குமேல் விஐபி பாஸ் அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஆன்லைனைல் புக் செய்தவர்களை மட்டுமே அதன்பின்னர் அனுமதிப்போம்.

காவல்துறை பணி சார்ந்த விஷயங்களை வெளிக்கொணரும் வகையில் காணொலி வெளியிட்டுள்ளார்கள் அதுபற்றி?

அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை பந்தல் அமைப்பது, கட்டுமானப்பணி செய்வது, பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பணிகளை சிறப்பாக செய்துள்ளார்கள்.

அதேப்போன்று முனிசிபாலிட்டி துப்புரவாளர்கள் 1200 பேர் குறிப்பிட்ட 3 மணி நேரத்திற்குள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மொத்தப்பணியையும் முடித்து இதுவரை எந்த குறையும் இல்லாமல் பணியாற்றியுள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறை, பேருராட்சித்துறை அன்னதானம், குடிநீர் பணிகளில் வாலண்டியர்கள் மூலம் தூக்கம் கூட இல்லாமல் பணியாற்றியுள்ளனர்.

வீல் சேர் அனைத்தையும் அவர்கள்தான் வழங்கி பணியாற்றினர். ரெவின்யூ டிபார்ட்மெண்ட் 22 செக்டார்களாக பிரித்து மிகமிக சிறப்பாக பணியாற்றியுள்ளனர். பொதுப்பணித்துறை, முனிசிபாலிட்டி, ரெவின்யூ டிபார்ட்மெண்ட் இரவுமுழுதும் கண் துஞ்சாது அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றியுள்ளார்கள்.

மற்றத்துறைகள் பணி பற்றி கூறினீர்கள் காவல்துறைப்பற்றி கூறவில்லையே?

ஆமாம் காவல்துறையும் சிறப்பாக பாதுகாப்புப்பணியில் ஈடுப்பட்டார்கள். அதில் சந்தேகமில்லை. 5500 பேர் இருந்தார்கள், பின்னர் கூடுதலாக 7500 ஆக மாற்றப்பட்டது, பின்னர் 12000 பேர் பாதுகாப்புப் பணியில் உள்ளார்கள். அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டார்கள் அதில் சந்தேகமே இல்லை. சிற்சில சம்பவங்கள் தவிர.

பள்ளிகள் எப்போதுமுதல் இயங்கும்?

ஏற்கெனவே 13,14,16 விடுமுறை விட்டுள்ளோம். 19 முதல் முறையாக பள்ளிகள் இயங்கும்.

இவ்வாறு காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x