பி.டி.ரவிச்சந்திரன்

Published : 14 Aug 2019 15:43 pm

Updated : : 14 Aug 2019 15:44 pm

 

பழநியில் விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் விநாயகர் சிலைகள்

vinayagar-statues

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழநியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலமாக விமரிசையாக நடைபெறும். இதை முன்னிட்டு அந்தந்த பகுதியினர் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதியில் வைத்து வழிபட்ட பின் ஒவ்வொரு ஊர்களிலும் இருந்துவரும் விநாயகர் சிலைகள் ஒன்று சேர்ந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணிகள் பழநி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போதே மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

பழநி மற்றும் இதன் சுற்றுப்புகிராமங்களில் 300 க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின்னர் செப்டம்பர் 4-ம் தேதி முதல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சண்முகநதியில் கரைக்கப்படவுள்ளது.

இதற்காக பழநி அடிவாரம் பகுதியில் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் விநாயகர் சிலைகளை செய்துவருகின்றனர்.

நீரில் எளிதில் கரையக்கூடிய களிமண், காகிதக்கூழ், அட்டைகள் ஆகியவற்றை கொண்டு சிலைகள் செய்யப்பட்டுவருகிறது. புல்லட் விநாயகர், ராக்கெட் விநாயகர், மான் வாகன விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை தொழிலாளர்கள் செய்துவருகின்றனர்.

விநாயகர் சிலைகள்

Popular Articles

You May Like

More From This Category

More From this Author