

திண்டுக்கல்
ப.சிதம்பரம் குறித்து தெரிவித்த கருத்துக்கு முதல்வரின் மனது நிச்சயம் உறுத்தும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குறித்து முதல்வர் தெரிவித்துள்ள கருத்து அரசியல் நாகரீகம் உடை யதா? அவர் தெய்வ பக்தி உள்ள வர். இப்படி பேசியதற்கு அவர் மனது நிச்சயம் அவரை உறுத் தும்.
காஷ்மீரின் சரித்திரத்தை, அங்குள்ள மக்களின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் நடிகர் ரஜினி காந்த் பேசியிருப்பது வருத்தம் அளிக்கிறது. காஷ்மீர் பிரச்சினை யில் மட்டும் கருத்து சொல்லாமல் காவிரி, நீட், நெக்ஸ்ட், முத்தலாக், என்.ஐ.ஏ., பெரியாறு அணை என தமிழகத்தின் அனைத்துப் பிரச் சினைகளிலும் அவர் கருத்து சொல்ல வேண்டும்.
புராணத்தைப் படித்து அர்ஜூ னன், கிருஷ்ணன் என அவர் கூறி யிருக்கிறார். முதலில் அவர் காஷ் மீர் சரித்திரத்தைப் படிக்க வேண் டும். வாய்க்கு வந்தபடி கருத்து சொல்லக் கூடாது. காஷ்மீரில் இரண்டு முன்னாள் முதல்வர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலே இதுவரை இல்லை என்றார்.