

திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் அருகே ஒட்டகுடிசல் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஸ்ரீநாத் ரெட்டி உட்பட 5 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பர்கூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரஜினி (37) என்பவர் படுகாயமடைந்தார்.
போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கி இருந்த கார் மற்றும் லாரியை தனித்தனியே அகற்றி, உடல்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “லாரி அதிவேகமாக வந்தது. லாரியில் ஓட்டுநர் உட்பட 4 பேர் இருந்தனர். அவர்களுடன் ஓட்டுநர் பேசிக் கொண்டே இயக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதும், லாரியில் இருந்தவர்கள் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டனர். லாரி ஓட்டுநர் மட்டும் படுகாயமடைந்துள்ளார்” என்றனர்.