

சேலம்
அயல்நாடுகளில் வசிக்கும் தமிழகத் தைச் சேர்ந்த தொழிலதிபர்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்வதாக முதல்வர் பழனிசாமி கூறினார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி நேற்று கூறிய தாவது:
நீலகிரி மாவட்டத்துக்கு நிவார ணம் வழங்குவதாக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் கூற வில்லை. நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றுதான் தெரிவித்துள்ளார். அதாவது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சின்னச் சின்னப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித் துள்ளார். ரூ.10 கோடி மதிப்பில் என்ன பணிகள் மேற்கொள்ளப் படும். நீலகிரியில் சுமார் 140 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. அதனை சரி செய்ய எவ்வளவு நிதி வேண்டும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
தவறான கருத்து
நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப் பட்ட மக்களை அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை என்ற தவறான கருத்தினை ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அங்கு கன மழை பெய்த மறுநாளே வருவாய்த் துறை அமைச்சரை உடனடியாக அனுப்பி, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. எதிர்க் கட்சி தலைவர் விளம்பரம் தேடத் தான் அவ்வாறு சொல்லியிருப்பார் எனக் கருதுகிறேன்.
நான் மேற்கொள்ளவுள்ள வெளி நாட்டுப் பயணத்தின் நோக்கம், தமிழகத்துக்கு அதிக தொழிற் சாலைகள் வர வேண்டும் என்பதே. தமிழகத்தில் இருந்து சென்று அயல்நாட்டில் வசிக்கும் தொழிலதிபர்களிடம் பேசி அதிக முதலீடு ஈர்க்கப்படும். மேலும் வெளிநாடுகளின் எரிசக்தி துறை, கால்நடை ஆராய்ச்சி நிலையம், சுகாதாரத் துறை உள்ளிட்ட துறை களில் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து இங்கு செயல்படுத்தப் படும்.
ப.சிதம்பரம் என்ன செய்தார்?
மத்திய அமைச்சராக இருந்த போது, ப.சிதம்பரம் தமிழகத்துக்கு என்ன திட்டத்தை கொண்டு வந்தார். தமிழகத்துக்கு தேவையான நிதியை வழங்கினாரா? தொழிற் சாலைகள் அமைத்தாரா?
காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளைத் தீர்த்தாரா? அவரது சுயநலம் மட்டுமே அவருக்கு முக்கியம். நாட்டு நலன் கிடையாது. மக்கள் அவரை ஏற்கெனவே நிராகரித்து விட் டார்கள். அவர் பூமிக்குதான் பாரம்.
காஷ்மீர் விவகாரத்தில் 1984-ம் ஆண்டு ஜெயலலிதா மேலவை உறுப்பினராக இருந்தபோது தெரிவித்த கருத்தை, நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.