

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படு கிறது. காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து தீவிரவாதிகள் அச்சு றுத்தல் இருப்பதால் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், கேளிக்கை பூங்காக்கள், வழி பாட்டுத் தலங்களில் கூடுதலாக போலீஸார் நியமிக்கப்பட்டு பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல் களில் சோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந் தால் காவல்துறை கட்டுப்பாட்டு அறை 100-க்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் நேரடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடிகுண்டு சோதனை
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். ரயில்வே டிஎஸ்பி முருகன் உத்தர வின்பேரில், ஆய்வாளர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் நேற்று வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து டிஎஸ்பி முருகன் கூறியதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் 110 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் 200-க் கும் மேற்பட்ட ரயில்வே போலீஸாரும், 100 ரயில்வே பாதுகாப்பு படையினரும் ஈடுபட் டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.