Published : 14 Aug 2019 09:27 AM
Last Updated : 14 Aug 2019 09:27 AM

கேரளாவுக்கு ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள்: திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

கேரளாவுக்கு திமுக சார்பில் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த மு.க.ஸ்டாலின்.

கன மழையால் பாதிக்கப்பட் டுள்ள கேரள மாநில மக் களுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவா ரணப் பொருட்களை அக்கட்சி யின் தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

கேரளாவில் கன மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட் களை சேகரித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலக மான அண்ணா அறிவாலயத் துக்கு அனுப்பி வைக்க வேண் டும் என கட்சி தொண்டர்கள், பொதுமக்களுக்கு மு.க.ஸ்டா லின் வேண்டுகோள் விடுத் திருந்தார்.

அதன்படி, திமுக நிர்வாகி கள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் 400 மூட்டை அரிசி, 1,880 புடவைகள், 1,185 லுங்கிகள், 800 போர்வைகள், 2 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள், 8 பெரிய பெட்டிகளில் பிஸ் கட் பாக்கெட்கள், 39 டிபன் பாக்ஸ்கள் என ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட் கள் அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டன. இந்தப் பொருட்கள் அடங்கிய லாரியை மு.க.ஸ்டாலின் கொடியசைத்து கேரளாவுக்கு அனுப்பி வைத்தார். அப் போது சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘கேரள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் வகையில் திமுக சார்பில் நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்புமாறு கட்சி நிர்வாகி கள், தொண்டர்கள், பொதுமக் களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதன்படி, நிவாரணப் பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. முதல் கட்டமாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரயில் மூலம் பொருட் களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x