Published : 14 Aug 2019 09:25 AM
Last Updated : 14 Aug 2019 09:25 AM

100 எடைக் குறைப்பு அறுவை சிகிச்சைகள்: சென்னை ஜெம் மருத்துவமனை சாதனை

எடைக் குறைப்புக்காக 100 பயனா ளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து ஜெம் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

இதுதொடர்பாக மருத்துவ மனை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

நாட்டிலேயே கேஸ்ட்ரோ என்ட் ராலஜி, லேப்ரோஸ்கோபிக், ரொபோ டிக் அறுவை சிகிச்சைகளுக்கு பெயர் பெற்ற முன்னணி மருத்துவ மனைகளில் ஒன்று ஜெம் மருத் துவமனை. இதன் சார்பில், தமிழக முதல்வர் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட பயனாளிகளின் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசும்போது, ‘‘முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், எடைக் குறைப்பு அறுவை சிகிச்சையை அங்கீகரித்த ஒரே, முதல் மாநிலம் தமிழகம்” என்றார்.

சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஜெம் மருத்துவமனையின் எடைக் குறைப்பு அறுவை சிகிச் சைத் துறை தலைவர் மருத்துவர் பிரவீன்ராஜ் பேசும்போது, “எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை லேப்ரோஸ்கோபிக் முறையில் செய்யப்படுவது. உடல் பருமன் பிரச்சினைகளால் உயிர் பாதிப்பு ஏற்படும் அபாயகரமான கட்டத் தில், இதுபோன்ற சிகிச்சை மிகவும் அவசியமானது. ஜெம் மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட எடைக் குறைப்பு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய் யப்பட்டுள்ளன’’ என்றார்.

எடைக் குறைப்பு அறுவை சிகிச்சைகளால் பயன்பெற்ற 50-க் கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டு, அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சைகளுக்கான பிரபல மருத் துவர் சி.பழனிவேலுவால் நிறுவப் பட்ட ஜெம் மருத்துவமனை, கோவையை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. ஜெம் மருத்துவமனையின் 5-வது கிளை சமீபத்தில் சென்னையில் தொடங் கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x