

சென்னை
தேசிய மருத்துவ ஆணையத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து பயிற்சி டாக்டர்கள் இன்று தங்கள் பணிகளை புறக்கணித்து போராட் டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் நோயா ளிகள் பாதிக்கப்படும் நிலை உரு வாகியுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சி லுக்கு (எம்சிஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கான சட்ட மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
இந்த நிலையில், தேசிய மருத் துவ ஆணையம் அமைப்பதற்கு நாடு முழுவதும் டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவ, மாணவிகள் கடந்த ஒரு வாரமாக வகுப்புகளை புறக்கணித்து பல் வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எம்பிபிஎஸ் முத லாமாண்டு மற்றும் இறுதியாண்டு படிக்கும் பயிற்சி டாக்டர்கள் இதில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரி வித்தும், டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படிக் கும் பயிற்சி டாக்டர்கள் இன்று தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து பயிற்சி டாக்டர்கள் கூறியதாவது:
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கக் கூடாது. இந்திய மருத் துவ கவுன்சிலை ஒழிக்கக் கூடாது. நெக்ஸ்ட் தேர்வை திணிக்கக் கூடாது. வரைவு தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். மருத்துவக் கல்வியை வணிகமயம் ஆக்கக் கூடாது. அரசு மருத்துவமனைகளில் டாக்டர் களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஒரு வாரமாக எம்பிபிஎஸ் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பல் வேறு போராட்டங்களில் ஈடுபட்ட னர். ஆனால், அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால், பயிற்சி டாக்டர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபடுகி றோம். அவசர சிகிச்சைப் பிரிவில் மட்டும் பயிற்சி டாக்டர்கள் இருப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.