

சென்னை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறு வணிகர்களின் பொருட்களை இணையதளம் வழியாக சந்தைப்படுத்தும் முயற்சியாக ‘மெரினா’ செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
வெளிநாட்டு நிறுவனங்கள்
இதுதொடர்பாக பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதா வது: இணையதள வணிகம் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப வணிகர் களை மேம்படுத்தி பாதுகாக்கவும் ‘மெரினா’ செயலி அறிமுகம் செய் யப்படுகிறது. இதில் முழுவதும் தமிழக வணிகர்களின் பொருட் கள் மட்டும் விற்பனை செய்யப் படும்.
இதற்காக தனியார் நிறுவனத் துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த செயலியை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, தங்களுக்கு அருகே 4 கிமீ தொலைவில் உள்ள கடைகளில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
48 நிமிடத்தில்..
அதிகபட்சம் 48 நிமிடத்தில் பொருட்கள் நேரில் ஒப்படைக்கப் படும். தரமற்ற, சேதமடைந்த பொருட்களை மாற்றிக் கொள்ள வும் கடைகளின் உரிமையாளர் களிடம் பேசவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பெட்டிக்கடை வைத்துள்ள எளிய வணிகர்களும் பலன் பெறுவர்.
இதுதவிர ஜிஎஸ்டி சட்ட விதிகளின்படி வணிகர்களுக்கு விதிக்கப்படும் அதிக அபராதங் களை நீக்குவதுடன், தர அடை யாளமின்றி பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மீதான 5 % ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் மத்திய, மாநில அமைச்சர்களை சந்திக்க உள்ளோம்.
முதல்கட்ட போராட்டம்
அதில் திருப்திகரமான முடிவு கள் கிடைக்காவிட்டால் முதல்கட்ட போராட்டம் குறித்து ஆகஸ்ட் 20-ம் தேதி உயர்மட்டக்குழுவில் விவாதித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.