

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து 5 கி.மீ. தொலை வில் செவிலிமேடு பகுதியில் அனுஷ்டான குளம் மற்றும் சாலக் கிணறு அமைந்துள்ளன. இக் கிணற்றை வரதராஜ பெருமாளே உருவாக்கியதாக ஐதீகம்.
ராமானுஜர் தன் இளமை காலத்தில், காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி பகுதியில் யாதவ பிரகாசர் வேதாந்தியிடம் மாணவராக கல்வி பயின்றார். அப்போது குருவுக்கும், மாணவ ருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ராமானுஜரை கொல்லும் அளவுக்கு யாதவ பிரகாசர் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
இதற்காக காசிக்கு அழைத்து செல்லப்பட்ட ராமானுஜர் விஷ யத்தை அறிந்து அவருடனான பயணத்தை முடித்து தெற்கு பகுதி யில் உள்ள காஞ்சிபுரத்தை நோக்கி பயணித்தார். வழியில் விந்திய மலைக்காட்டில் இருள் சூழ்ந்ததால் வழி தெரியாமல் அவர் கலங்கி நின் றார். அப்போது, அவருக்கு உதவ பெருந்தேவி தாயாரும், வரத ராஜ பெருமாளும் வேடன், வேடுவச் சியாக வடிவம் கொண்டு ராமானு ஜர் முன் தோன்றினர்.
அப்போது, ராமானுஜர் அவர் களிடம் உதவி கேட்க, தாயா ரும், சுவாமியும் அவருடன் பயணித் தனர். வழியில் ஓரிடத்தில் வேடு வச்சிக்கு தாகம் எடுப்பதாக கூற, இருளில் தண்ணீரை எங்கு தேடு வது என ராமானுஜர் கலங்கி நின்றார். அப்போது வேடனாக வந்த சுவாமி தனது அம்பு மூலம் ரக சியமாக அங்கே சாலக்கிணற்றை உருவாக்கி, அதிலிருந்து தண் ணீரை எடுத்துவருமாறு கூறினார்.
இதைக் கேட்ட ராமானுஜர் அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து பருகச் செய்தார். பின்னர், மீண்டும் தண்ணீர் எடுத்துவர சென்ற ராமானுஜர், திரும்பி வந்து பார்த்தபோது அவர்கள் இருவரும் அங்கு இல்லை. வழித்துணைக்கு வந்தவர்கள் இல்லாததால், விந்திய மலைக் காட்டில் நாம் எங்கு இருக் கிறோம் என தெரியாமல் திகைத்து நின்றபோது, மனிதர்களின் நட மாட்டத்தை கண்டு, அவர்களிடம் இது எந்த பகுதி என விசாரித்த போது, காஞ்சிபுரம் எனக்கூறினர். ஒரே இரவில் வடக்கில் இருந்த நாம், காஞ்சிபுரத்துக்கு வந்தது, வரதராஜ பெருமாளின் அருள் என மகிழ்ந்தார் ராமானுஜர். வேடன், வேடுவச்சியாக வந்தவர்கள் பெரு மாளும், தாயாரும் என உணர்ந் தார்.
சாலக்கிணற்றின் தண்ணீரை சுவாமி விரும்பி பருகியதால், அன்று முதல் சாலக்கிணற்றில் இருந்து அதிகாலையில் ராமானுஜர் தண் ணீரை எடுத்துச் சென்று, தினமும் வரதராஜ பெருமாளை நீராட்டி வழிபட்டார் என்பது ஐதீகம்.
தற்போதும், தினமும் அதி காலையில் சாலக்கிணற்றில் இருந்து பட்டாச்சாரியார்கள் தண் ணீரை தலையில் சுமந்து நடந்தே கோயிலுக்கு எடுத்து வந்து சுவாமியை நீராட்டுகின்றனர்.
இந்நிலையில், அத்திவரதர் வைபவத்தில் பொதுமக்கள் கூட் டம் அதிகமாக உள்ளதால் மேற் கண்ட சாலக்கிணற்று தீர்த்தத்தை பெருமாளுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், அத்திவரதர் வைபவத் தின் முதல் 3 நாட்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் மேற் கண்ட தீர்த்தத்தின் மூலம் நீராடல் நடைபெற்றுள்ளது.
தற்போது, அத்திவரதர் வைப வம் நிறைவடைய 3 நாட்களே உள்ளதால், இந்த நாட்களிலாவது சாலக்கிணற்று தீர்த்தத்தின் நீரைக் கொண்டு அத்திவரதரை நீராட்ட வேண்டும் என அர்ச்சகர்கள் மற் றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் 40 ஆண்டு களுக்கு பிறகே அத்திவரதர் வெளியே வருவார் என்பதால், மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற் பாடுகள் மூலம் மேற்கண்ட கோரிக் கையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.