Published : 14 Aug 2019 07:53 AM
Last Updated : 14 Aug 2019 07:53 AM

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு காட்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருநெல்வேலி

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு காட்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர் கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 3-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை இரு வேளையும் பல்வேறு வாகனங் களில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 9-ம் தேதி தேரோட்டம் நடந்தது.

தபசு காட்சி வைபவம் நேற்று மாலை நடைபெற்றது. நேற்று அதி காலை 5 மணிக்கு சுவாமி, அம்பா ளுக்கு விளா பூஜை, 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் சந்திர மவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பகல் 12.05 மணிக்கு தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்துக்கு கோமதி அம்பாள் ஒற்றைக்காலில் நின்றபடி, தவக்கோலத்தில் எழுந்தருளினார்.

மாலை 4.30 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப் படும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். அப் போது, தனது வலதுபாகத்தில் சிவனுக்குரிய அம்சங்களும், இடது பக்கம் திருமாலுக்குரிய அம்சங்களுமாக சங்கரநாராயணராக எழுந் தருளி, கோமதி அம்பாளுக்கு காட்சி தந்தார். சுவாமியை 3 முறை வலம் வந்து அம்பாள் வழிபட்டார். அங்கு கூடியிருந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வானத்தை நோக்கி வீசி வழிபட்டனர்.

பின்னர், இரவு 11.15 மணிக்கு சுவாமி யானை வாகனத்தில் 2-வது தபசு காட்சிக்கு புறப்பட்டார். நள் ளிரவு 12 மணிக்கு மேல், யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமி யாக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திரு நெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர் மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் சங்கரன்கோவிலுக்கு இயக்கப்பட்டன. எஸ்பி அருண் சக்திகுமார் தலைமையில் போலீ ஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x