

அந்நிய முதலீடுகளை தமிழகத் துக்கு ஈர்க்கும் வகையில் இங்கி லாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி 13 நாள் பயணமாக செல்கிறார்.
தமிழகத்தில் தொழில் முதலீடு களை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் கடந்த 2015-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தி னார். அதன்மூலம் ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி யில் முதல்வர் பழனிசாமி தலை மையில் 2-வது உலக முதலீட்டா ளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 304 புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் மூலம் ரூ.3 லட்சத்து 431 கோடிக்கான முதலீடுகள் கிடைத்தன.
இந்நிலையில், தமிழகத்துக் கான முதலீடுகளை மேலும் ஈர்க்கவும், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில் துறைகளில் புதிய தொழில்நுட்பங்கள், புதிய முயற்சிகளை அறிந்துகொள்ள வும் முதல்வர் பழனிசாமி 13 நாட்கள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 28-ம் தேதி புறப்பட்டு இங்கிலாந்து தலைநகர் லண்டன் செல்லும் அவர், அங்கு 29,30 ஆகிய இரு தினங்களில் சுகாதா ரம், எரிசக்தித் துறை முதலீட்டா ளர்களை சந்தித்துப் பேசுகி றார்.
பின்னர் அங்கிருந்து செப்.1-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு பப்பலோ, நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, லாஸ்ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களுக்கு செல்லும் முதல்வர், அங்கு கால்நடை அபிவிருத்தி உள்ளிட்ட பல் வேறு துறைகள் சார்ந்த முதலீட் டாளர்களை சந்திக்கிறார். செப். 7-ம் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து துபாய் செல்லும் முதல்வர், அங்கிருந்து 8-ம் தேதி புறப்பட்டு, 9-ம் தேதி சென்னை திரும்புகிறார். துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.
தமிழக முதல்வராக கருணா நிதி, ஜெயலலிதா இருந்தபோது, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற் காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது கிடையாது. முத லீட்டாளர்கள் மாநாட்டை ஜெயல லிதா ஏற்பாடு செய்தபோதுகூட, அமைச்சர்கள் மட்டுமே வெளிநாடு களுக்குச் சென்று முதலீட்டாளர் களை சந்தித்து வந்தனர். சமீபத் தில் நடந்து முடிந்த முதலீட்டாளர் கள் மாநாட்டின்போது கூட அமைச் சர்கள் மட்டுமே வெளிநாடு களுக்கு சென்று வந்தனர்.
தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக, தமிழக முதல் வர் ஒருவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.