

தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.321 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களும் 22,600 கட்டிடங்களும் குத்த கைக்கு விடப்பட்டுள்ளன. விவசாய நிலங்களை 1,23,729 குத்தகைதாரர் கள் பயிர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்த மான நிலங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு, கணக்கெடுக்கும்போது தனியார் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தாக கண்டறியப்படும் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.
இவ்வாறு, 2017-18-ம் ஆண்டில் 263.08 ஏக்கர் விளை நிலங்கள், 54 கிரவுண்ட் மனை மற்றும் 24 கிரவுண்ட் பரப்பளவு உள்ள கட்டிடங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு, ரூ.193.78 கோடியாகும். 2018-19-ம் ஆண்டில் 276.31 ஏக்கர் விளைநிலங்கள், 33 கிரவுண்ட் மனை மற்றும் 46 கிரவுண்ட் பரப்பளவுள்ள கட்டிடங் கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.127.42 கோடியாகும்.
இவ்வாறு, கடந்த 2 ஆண்டு களில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ரூ.321 கோடி மதிப்புடைய கோயிலுக்கு சொந்த மான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி கள் கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.321 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பணி களை விரைவுபடுத்தும்படி அதி காரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது. அவர்களும் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்த மான நிலங்களை கண்டறிந்து மீட் கும் நடவடிக்கைகளில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றனர்.