

தமிழகத்தில் கடலோர மாவட்டங் கள், தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக அதிகனமழை பெய்து வந்தது. தற்போது அப்பகுதியில் மழை குறைந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் இதர பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:
காற்று குறைந்துள்ளது
ஈரப்பதம் மிகுந்த தென்மேற்கு பருவக் காற்று மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி வீசுவது குறைந் துள்ளது. அதன் காரணமாக நீல கிரி, கோவை, தேனி, திருநெல் வேலி மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக மழை குறைந் துள்ளது. சில தினங்களுக்கு பிறகே அங்கு மழை தீவிர மடைய வாய்ப்புள்ளது.
எனவே அடுத்த சில தினங் களுக்கு தமிழகம், புதுச் சேரியில் கடலோர மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். ஓரிரு இடங் களில் மழை பெய்ய வாய்ப் புள்ளது.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரத்தின்படி அதிக பட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டம் மற்றும் தேவாலா, கோவை மாவட்டம் வால்பாறை, ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., கோவை மாவட்டம் சோலையாறு, சின்கோனா, திரு நெல்வேலி மாவட்டம் செங் கோட்டை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ., கோவை மாவட்டம் சின்னகல்லார், நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறினார்.