

காஞ்சிபுரம்
அத்திவரதர் விழாவில் இடையூறு களுக்கு இடையேயும் கோயிலின் சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மை யாக வைப்பதற்காக துப்புரவு ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
அத்திவரதரை தரிசிப்பதற்காக பல்வேறு மாநிலங்கள், மாவட்டங் களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் தரி சனத்துக்கான வரிசைகள், காத் திருப்பு பகுதிகளில் பிளாஸ்டிக் குடிநீர் கேன்கள், சாப்பாடு பொட்டலங்கள், குழந்தை களுக்காக பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் உள்ளிட்டவற்றை அங்கேயே விட்டுச் செல்கின்றனர்.
மேலும், கோயிலை சுற்றிலும் பல்வேறு இடங்களில் அன்ன தானங்கள் வழங்கப்படுகின்றன. இதை வாங்கி சாப்பிடும் பொது மக்கள் தட்டுகளை சாலையிலேயே வீசுகின்றனர். மேலும், சாலையோர உணவு கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் அருகே உள்ள குப்பை தொட்டிகள் மற்றும் சாலையிலேயே வீசும் நிலை உள்ளது.
இவற்றை அகற்றி நகரை தூய்மைப்படுத்தும் பணியில் காஞ்சிபுரம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந் துள்ள துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி களை செய்வதால்,கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகள் மற்றும் பக்தர்கள் காத்திருப்பு பகுதிகள் தூய்மையாக காணப்படுகின்றன. இதனால் துப்புரவு தொழிலாளர் களை உள்ளூர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.