Published : 13 Aug 2019 06:53 AM
Last Updated : 13 Aug 2019 06:53 AM

அத்திவரதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை

அத்திவரதரை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு வசதியாக ஓரிக்கை, முத்தியால் பேட்டை ஆஞ்சநேயர் கோயில், ஓளிமுகமது பேட்டை மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் அருகில் உள்ள ரங்கசாமி குளம் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் அமைக் கப்பட்டுள்ளன.

இந்த தற்காலிக பேருந்து நிலை யங்களில் போக்குவரத்து துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கிருந்த பயணிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார். அப் போது, விழுப்புரம் அரசு போக்கு வரத்துக் கழக நிர்வாக இயக்குநர் முத்துகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

பின்னர், ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பக்தர்களுக்கு வசதியாக, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக காஞ்சிபுரம் அருகில் உள்ள திருவள்ளூர், வேலூர், திரு வண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளில் இருந்து அதி களவில் பக்தர்கள் வருவதால், விழுப்புரம் கோட்ட பஸ்கள் தினமும் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை, தாம்பரம், ஆற்காடு, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, திருவண்ணாமலை, வந்தவாசி, திண்டிவனம், செய்யாறு, திருப்பதி, திருத்தணி, வேலூர், செங்கல்பட்டு, ஆரணி ஆகிய 14 இடங்களுக்கு தினமும் 861 தடவைகள் பேருந்து கள் இயக்கப்பட்டு வந்தன.

கடந்த 1-ம் தேதி முதல் கூடுதலாக 265 தடவைகள், 6-ம் தேதி முதல் கூடுதலாக 87 தடவைகள் என மொத்தம் 1,213 தடவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் தினமும் சராசரியாக 70 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வசதியாக நாள்தோறும் 70 சிறிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, தற்காலிகமாக அமைக் கப்பட்டுள்ள 5 பேருந்து நிலையங் கள் மற்றும் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்தையும் இணைக் கும் வகையில் 20 சிறிய பேருந்து கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x