செய்திப்பிரிவு

Published : 12 Aug 2019 20:05 pm

Updated : : 12 Aug 2019 20:05 pm

 

வீரபாண்டிய கட்டபொம்மன் 2ம் பாகம் எடுத்தால் வைகோவுக்கு என்ன வேடம் பொருத்தமாக இருக்கும்? : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு 

elangovan-of-congress-attacks-vaiko

வீரபாண்டிய கட்டபொம்மன் 2ம் பாகம் படம் எடுத்தால் அதில் வைகோவுக்கு பொருத்தமாக இருக்கு வேடம் என்னவாக இருக்கும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளார்.

சென்னையில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் இளங்கோவன் பேசியதாவது:

சிங்கம்-1, சிங்கம்-2, பாகுபலி-1, பாகுபலி 2 என்று படங்கள் தொடர்ந்து வருகின்றன. அது போல் வீரபாண்டிய கட்டபொம்மன் -2 என்று படம் வந்தால் எட்டப்பனாக நடிக்க உகந்த நபர் யார் என்று சொன்னால் மறைந்த விகே.ராமசாமியை விடவும் சிறப்பாக நடிக்கக் கூடியவர்.

இருந்தாலும் அது நடிப்பல்ல அவருடைய உண்மையான தோற்றமே அதுதான் ஆகவே அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் டெல்லி போனால் அமித் ஷாவைப் பாருங்கள், மோடியைப் பாருங்கள் நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால் அவர்கள் சொல்கின்ற படி ஆடுகின்றீர்களே இது என்ன நியாயம்? வெற்றி பெற்று ஒருவாரம் கூட ஆகவில்லை காங்கிரஸின் சப்போர்ட்டில் நான் ஜெயிக்கவில்லை என்கிறார். யார் இதை ஏற்றுக் கொள்வார்கள்.

இவ்வாறு பேசினார் அவர்.

வைகோமோடிஅமித் ஷாகாங்கிரஸ்திமுகவீரபாண்டிய கட்டபொம்மன் பார்ட் 2பாகுபலி பார்ட்2தமிழகம்அரசியல்

Popular Articles

You May Like

More From This Category

More From this Author