

கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால், நீலகிரி மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் மண் சரிவு ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்தனர். பாதிக் கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நீலகிரி மாவட்டத்துக்கு வந்தார். கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் மண் சரிந்து வீடு மீது விழுந்ததில் மனைவி அமுதா, மகள் பாவனா ஆகியோரை இழந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் வழங்கினார். காயமடைந்த அவரது மகன் லோகேஸ்வரனுக்கும் ஆறு தல் கூறினார்.
நடுவட்டம் - கூடலூர் சாலையில் ஏற்பட்டுள்ள சேதங்களையும் ஸ்டா லின் பார்வையிட்டார். பின்னர், கூடலூர் அருகே தொரப்பள்ளி அர சுப் பள்ளியில் தங்கவைக்கப்பட் டுள்ள பழங்குடியினரை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட் களை வழங்கினார். பந்தலூர் தாலுகா பகுதிகளில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை யும் அவர் சந்தித்தார். எலியாஸ் கடை, சேரம்பாடி செக்போஸ்ட் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார்.
இன்று உதகையில் இருந்து குருத்துக்குளி, எம்.பாலாடா, கப்பத் தொரையாடா, கல்லக்கொரை ஆடா ஆகிய பகுதிகளில் பாதிக் கப்பட்ட விவசாயிகளை சந்திப்பது டன், வெள்ள சேதங்களையும் பார்வையிடுகிறார்.