

சென்னை
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங் களில் வரும் 14, 15 ஆகிய தேதி களில் மீண்டும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதி காரிகள் கூறியதாவது:
கடந்த ஒரு வாரமாக கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்திருந்தது. அத னால் அம்மாநிலங்களில் கனமழை பெய்துவந்தது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. தற்போது பருவமழை தீவிரம் குறைந்துள்ளது. அதன் காரணமாக அடுத்த இரு நாட் களுக்கு தமிழகம் மற்றும் புதுச் சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், 14, 15 தேதிகளில் பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. அதன் காரணமாக அவ்விரு நாட்களில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மீண்டும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரத்தின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 13 செ.மீ., கோவை மாவட்டம் சின்னகல்லாரில் 10 செ.மீ., நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, கோவை மாவட்டம் சோலையாரில் 8 செ.மீ., வால்பாறையில் 7 செ.மீ., தேனி மாவட்டம் பெரியாறில் 5 செ.மீ., தேக்கடி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதியில் மேற்கு, தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 50 கி.மீ. வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த இரு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.