முதல்வர் காப்பீட்டு திட்ட சிகிச்சை நிறுத்தப்பட்டதால் அரசு மருத்துவமனைகளில் 3 நாளில் ரூ.4 கோடி வருவாய் இழப்பு: மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகள் பாதிப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை நிறைவேற்ற வலியு றுத்தி முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிப் பதை டாக்டர்கள் நிறுத்தியதால் கடந்த மூன்று நாட்களில் அரசு மருத்துவமனைகளில் ரூ.4 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் டாக்டர் களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்க வேண்டும், எம்சிஐ விதிப்படி டாக்டர்களின் எண்ணிக்கையை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் குறைக்கக்கூடாது, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்துள்ள அரசு மருத்துவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும்,

அரசு மருத்துவர்களுக்கு முது நிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக மக்களின் நலன்கருதி மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி அரசு டாக்டர் கள் தொடர்ந்து பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டு வருகின் றனர்.

இதையடுத்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அரசு டாக்டர்கள் ஒன்றாக இணைந்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்ட மைப்பைத் தொடங்கினர். ஜன நாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்து வர்கள் சங்கம், அனைத்து அரசு டாக்டர்கள் சங்கம், சமூக சமத்துவத் துக்கான டாக்டர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இடம்பெற்றன.

இந்தக் கூட்டமைப்பில் எடுக்கப் பட்ட முடிவின்படி கடந்த மாதம் 29-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளி களின் விவரங்களை அனுப்புவது, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பணி, இறப்பு ஆய்வுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக கடந்த 9-ம் தேதி முதல் அரசு மருத்துவ மனைகளில் முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்துவதை டாக்டர்கள் நிறுத்தியுள்ளனர். ஏழை நோயாளி களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இல்லாமல், இலவசமாக சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

இதனால், அரசு மருத்துவமனை களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட் டுள்ளது. காப்பீட்டுத் திட்டம் வரு வாய் கிடைக்காததால் மருத்துவ மனைகளுக்கு தேவையான மருத் துவ உபகரணங்கள் வாங்க முடிய வில்லை. இதனால், ஏழை நோயாளி கள் சிகிச்சை பெற முடியாத நிலையும் உருவாகியுள்ளது.

டாக்டர்கள் விளக்கம்

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களிடம் கேட்ட போது, “முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வருவாய் ஈட்டு கின்றன. காப்பீட்டுத் திட்டம் செயல் படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த 3 நாட்களில் மட்டும் 4 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். வரும் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்கும் மாபெ ரும் மனித சங்கிலிப் போராட் டம் நடைபெறும். 23-ம் தேதி முதல் சென்னையில் அரசு டாக்டர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவார்கள். இறுதிகட்டமாக 27-ம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும்” என்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in