

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம் உட்பட நாடு முழு வதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, தலைவர்கள் வெளியிட் டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயப்பூர் வமான பக்ரீத் வாழ்த்துகளை தெரி வித்துக் கொள்கிறேன். இறை வனின் விருப்பத்துக்கு கீழ்படிந்து தியாகத்தை செய்ய முன்வந்த ஒரு தந்தையின் நினைவை கொண் டாடும் விழா இது. நம்முடைய எண் ணங்களையும், செயல்களையும் இறைவனின் விருப்பத்துக்கு ஒப்பு விக்கும் நாளாக இந்நாள் விளங் குகிறது. இந்த நன்னாளில், சமு தாயத்தில் பெருந்தன்மை, சகிப்புத் தன்மை, இரக்க குணங்களை ஊக்கு விப்பதன் மூலம் தெய்வீக நற்பண் புகளை நிலைநிறுத்துவோம்.
முதல்வர் பழனிசாமி: தியாகத் தைப் போற்றும் புனித திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனை வருக்கும் உளம்கனிந்த நல்வாழ்த் துகளை தெரிவித்துக் கொள்கி றேன். இறை கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ் மாயிலை இறைவனுக்கு அர்ப் பணிக்கத் துணிந்த இறைத் தூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினை வுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.
இத்திருநாளில், ‘எவர் ஒருவர் இறை அச்சம் கொள்கிறார்களோ, நன்னடத்தை மேற்கொள்கிறார் களோ, அத்தகையவர்களுடன் இறைவன் இருக்கின்றான்’ என்ற திருக்குரானின் போதனையை மக்கள் மனதில் நிறுத்தி, உலகில் அன்பும், அமைதியும், மனிதநேய மும் தழைத்தோங்க அனைவரும் நல்லொழுக்கத்துடன் ஒற்றுமை யாக வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: தியாகம், அறம், மனித நேயம், ஏழை எளியவர்கள் மீது பரிவு, கருணை உள்ளிட்ட நற்செயல்களுக்கு எடுத் துக்காட்டாக விளங்கும் இஸ்லா மிய பெருமக்கள் தியாகத் திருநாள் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச் சியளிக்கிறது. சமுதாய நல்லிணக் கம் போற்றும் சிறப்பம்சத்தை எடுத் துரைக்கும் வகையில் இந்த தியாகத் திருநாளைக் கொண்டா டும் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: உலகோர் அனை வரும் ஒரே தாய், தந்தை வழிவந்த வர்கள் என்ற நபிகள் நாயகம் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத் துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: புவி எங்கும் வாழும் முஸ்லிம்கள் புனிதத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இவ்வேளை யில் இதயங்கனிந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கி றேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: பக்ரீத் திருநாள் சொல்லும் பாடங் களை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டும். சகோ தரத்துவம், அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும். நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜய காந்த்: இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த அனைவரும் நலமுடனும், எல்லா வளமுடனும், சம வாய்ப்பும், சம உரிமையும் பெற்றிட வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சாந்தியும், சமாதான மும் மேலோங்க உழைப்போம், மனித உறவுகள் உன்னதம் பெற அன்பை விதைப்போம்.
விசிக தலைவர் திருமாவள வன்: இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இதர சமூகங்களைச் சார்ந்த யாவரும் ஈகை, இரக்கம், கருணை ஆகியவற்றை மேம்படுத்தவும் சமூகநல்லிணக்கத்தை பாதுகாக்க வும் இந்தத் திருநாளில் உறுதி யேற்போம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: வசதி வாய்ப்பு களையோ, உருவங்களையோ பார்க்காமல் உள்ளங்களையும் செயல்களையும் மட்டுமே இறை வன் பார்க்கிறான் என்ற நபிகள் நாயகத்தின் மொழியை நினைவில் கொண்டு நல்லனவற்றையே நினைத்து, நல்லனவற்றையே செய்து நாளும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.
தமுமுக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: சோதனைகள் நிறைந்த இக்காலக் கட்டத்தில் இறைத்தூதர்கள் இப்ராஹீம் மற் றும் இஸ்மாயில் வெளிப்படுத்திய உறுதியான இறை நம்பிக்கையை நாமும் வளர்ப்பதற்கு முயல்வோ மாக. சோதனைகள் அகன்று அனைவரும் ஜனநாயக உரிமை களை அனுபவித்து நல்லிணக்கத் துடன் வாழ இந்நாளில் இறைவனை பிரார்த்திப்போம்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெக லான் பாகவி, மக்கள் தேசிய கட்சி யின் நிறுவனத் தலைவர் சேம.நாரா யணன் உள்ளிட்ட தலைவர்களும் பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித் துள்ளனர்.