

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழா இன்னும் 5 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதால், அங்குபக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. விடுமுறை நாளான நேற்றுலட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால், கோயிலில் இருந்து4 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், அத்திவரதரை தரிசனம் செய்தவர் கள் நீண்ட தூரம் நடந்து சென்று ஆட்டோ மற்றும் மினி பேருந்துகள் மூலம் பேருந்து மற்றும் ரயில் நிலைங்களை சென்றடையும் நிலை உள்ளது.
இதனால், கோயிலுக்கு அருகே வசிக்கும் நபர்கள், மோட்டார் சைக்கிளில் பயணிக்க விரும்பும் நபர்களை பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு அழைத்து செல்கின்றனர். இதற்காக, ஒரு வரிடம் ரூ.75 கட்டணமாக வசூலிக்கின்றனர்.
இதுகுறித்து, இளைஞர்கள் சிலர் கூறும் போது, “கோயிலுக்கு வரும் மக்கள் கடும் அவதி யடைகின்றனர். சரியான திட்டமிடல் இல்லாத தால், போக்குவரத்து முற்றிலும் முடங்கி யுள்ளது. இதனால், தரிசனம் முடித்தவர்கள் பேருந்து நிலையங்களுக்கு செல்ல நீண்ட தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதில், முதியோர்களின் நிலை மிகவும் பரிதாபமானது. முதலில் ஒரு சிலரை மனிதாபிமான முறையில் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றோம். ஆனால், தற்போது கூட்டம் அதிகமாக உள்ளதால் பெட்ரோலுக்கு எனக்கூறி ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது, இது தொழிலாக மாறியுள்ளது’’ என்றனர்.