

இந்திய சுதந்திர வரலாற்றில் பாஜக தலைவர்கள் யாரும் இல்லாததால் காங்கிரஸ் தலைவர் வல்லபாய் பட்டேலை தலைவராக்கி விட்டனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீர் உரிமை பறிப்பு கண் டன பொதுக்கூட்டம் தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் ப.சிதம்பரம் பேசியதாவது:
காஷ்மீர் பிரிட்டிஷ் காலனியாக இல்லை. ஒரு சமஸ்தானமாக இருந் தது. பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் விடுதலை பெற்றபோது, எந்த நாட்டோடும் சேரப்போவ தில்லை என காஷ்மீர் முடிவெடுக் கிறது. அப்போது பாகிஸ்தான் கூலிப்படை காஷ்மீரை கைப்பற்ற வந்தபோது காஷ்மீர், இந்தியா விடம் உதவி கேட்கிறது. இந்தியா வுடன் இணைந்தால் மட்டுமே, இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட முடியும் என்று ஜவஹர்லால் நேரு தெரிவித்தார். இந்தியாவுடன் இணைவதாக காஷ்மீர் தெரிவித்த பிறகு, அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேலின் ஒப்புதல் பெற்றுத்தான் இந்தியா காஷ்மீரை மீட்டது. இந்த வரலாறு தெரியாத பாஜக நேருவுக்கும் வல்லபாய் பட்டேலுக்கும் சண்டை என திரித் தனர். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பாஜக தலைவர்கள் யாரும் இல்லை. அதனால் காங் கிரஸ் தலைவர் வல்லபாய் பட் டேலை பாஜக திருடி, அவர்களின் தலைவராக்கி சொந்தம் கொண்டா டுகிறது.
சட்டத்தை தவறாக பயன் படுத்தி, காஷ்மீர் மாநிலம், இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப் பட்டுள்ளன. பிற்காலத்தில் தமி ழகம் கூட யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் அபாயம் உள்ளது. காஷ்மீரை பிரித்ததற்கு பாஜக கூறும் காரணங்கள் அனைத்து ஏற்புடையதாக இல்லை.
குறிப்பிட்ட 4 சட்டங்கள் காஷ் மீருக்கு பொருந்தாது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அவர் கூறியது உண்மை. அதேநேரத்தில் 100-க்கும் மேற்பட்ட சட்டங்கள் பொருந்தக்கூடியதாக உள்ளன. அதை அவர் கூறவில்லை. காஷ் மீரில் முஸ்லிம்கள் அதிகம் வசிப்ப தாலேயே, 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசி யல் சாசனத்தில் 371-வது பிரிவில் நாகாலாந்து, அசாம் போன்றவற் றுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப் பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசுக்கு மக் களவையில் 3-ல் 2 பங்கு பெரும் பான்மை உள்ளது. மாநிலங்கள வையில் பெரும்பான்மை இல்லை. அதுமட்டும் கிடைத்துவிட்டால், இந்திய அரசியல் சாசனத்தையே திருத்திவிடுவார்கள். பாஜக எதிர்க் கும் திறனை காங்கிரஸ் மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸூக்கு திமுக துணை நிற்கிறது. காஷ் மீருக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தரும் வரை காங்கிரஸ் தொடர்ந்து போராடும். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய செயலர் சஞ்சய்தத், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழ கிரி, முன்னாள் தலைவர்கள் எம்.கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, எம்பிக்கள் எச்.வசந்தகுமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், கார்த்தி சிதம் பரம், விஜயதரணி எம்எல்ஏ உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.