Published : 12 Aug 2019 09:06 AM
Last Updated : 12 Aug 2019 09:06 AM

வேலூர் தேர்தலில் அதிமுக செல்வாக்கு அதிகரிப்பு: அதிக வாக்குகள் கிடைத்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் 

வேலூர்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவின் வாக்கு அதிகரித் திருப்பது அக்கட்சி தொண்டர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 0.8 சதவீதம் வாக்குகள் வித்தியா சத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண் முகம் தோல்வியை தழுவியுள்ளார். கடந்த 2014-ல் நடந்த வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் 39.35 சதவீதத்துடன் 3 லட்சத்து 38 ஆயிரத்து 719 வாக்குகளை பெற்றார். தற்போது நடந்த வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், 46.5 சதவீதத்துடன் 4 லட் சத்து 77 ஆயிரத்து 199 வாக்குகள் பெற்றுள்ளார். இது கடந்த தேர்தலை விட ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 480 அதிகமாகும்.

அதேபோல், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம் பூர், வாணியம்பாடி தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. இதில், குடியாத்தம் மற்றும் ஆம்பூர் தொகுதி எம்எல்ஏக்கள் அமமுக வுக்கு சென்றதால் இடைத்தேர்தல் நடந்தது. 2016 பேரவை தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் ஆகியவற்றில் பெற்ற வாக்குகளின் அடிப்படை யில் பார்த்தால், வேலூர் மக்கள வைத் தொகுதிக்கு உட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப் பம், குடியாத்தம், ஆம்பூர், வாணி யம்பாடி தொகுதிகளில் அதிமுக வின் வாக்கு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகி கள் கூறும்போது, ‘‘அதிமுகவின் வாக்கு வங்கி கிராமங்களை அடிப் படையாகக் கொண்டது. வேலூர் தேர்தலில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வாணியம்பாடி, ஆம்பூர், உம்ராபாத், பேரணாம் பட்டு நகரங்களில் எங்களுக்கு போதுமான அளவுக்கு சிறுபான்மை யினரின் வாக்குகள் கிடைக்காது என்பதால் கிராமங்களில் இழந்த வாக்குகளை மீட்டெடுக்கும் திட்டத்தை கையில் எடுத்தோம். அதேநேரம், சிறுபான்மையினர் வாக்குகளை கவர மாற்று திட்டங்களும் எடுக்கப்பட்டன.

வேலூரில் நடந்த தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்திலே அமைச்சர் கே.சி.வீரமணி பேசும் போது கிராமங்களில் உள்ள வாக் காளர்களை கவர தீவிரமாக களத் தில் பணியாற்ற வேண்டும் என்று கூறினார். அதை 6 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனை வரும் கச்சிதமாக செய்து முடித் தனர். தேர்தல் முடிவுகளில் இது முழுமையாக பிரதிபலித்தது. கிராமங்களில்தான் அதிமுகவுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத் துள்ளன. இது எங்களுக்கு மகிழ்ச்சி தான். அதேநேரம், சிறுபான்மை யினர் வாக்குகள் எங்களுக்கு பெரு மளவு கிடைக்காதது தற்காலிகமான முடிவாகத்தான் இருக்கும்’’ என்றனர்.

பரிசுப் பெட்டிக்கு 4,446 வாக்கு

வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தலில் போட்டியிட்ட 28 பேரில் 17 பேர் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளே பெற்றனர். இவர்களில் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சுகுமார் 4,446 வாக்குகள் பெற்றார். பெரிய அளவில் பிரச்சாரத்தில் தென்படாத அவர் அதிக வாக்குகள் பெற்றவர்கள் பட்டியலில் நோட்டாவைத் தவிர்த்து நான்காமிடம் பிடித்துள்ளார்.

ஆரணியைச் சேர்ந்த சுகுமார், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் நண்பர் என்று தெரிகிறது. இதுதொடர்பாக அதிமுக முன்னணி நிர்வாகிகள் கூறும்போது, ‘‘அமமுக போட்டியிடாத நிலையில் பரிசுப்பெட்டி சின்னத்தை வேறு யாரும் பெறக்கூடாது என்ற முடிவில் ஏ.சி.சண்முகத்துக்கு நெருக்கமான நண்பரான ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் மூலம் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கி பரிசுப் பெட்டி சின்னத்தைப் பெற்றனர். பரிசுப் பெட்டி சின்னம் நான்காமிடம் பிடித்திருப்பது எங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x