Published : 12 Aug 2019 08:29 AM
Last Updated : 12 Aug 2019 08:29 AM

‘இந்து தமிழ்’ நாளிதழ், சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வழிகாட்டு நிகழ்ச்சி; செல்பேசியை தேர்வுக்காக ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாம்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவுரை

திருநெல்வேலி

``போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற இடைவிடாத முயற்சி தேவை. நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட் போன்களை தேர்வுக்காக ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாம்" என்று, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரும், சிறப்பு அதிகாரியுமான வீ.ப.ஜெய சீலன் ஐஏஎஸ் தெரிவித்தார்.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள் ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு தயாரா கும் மாணவ, மாணவிகளுக்கு வழி காட்டும் வகையில் ‘இந்து தமிழ்’ நாளிதழ் மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய ‘ஆளப்பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி, பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

அச்சம் கூடாது

நிகழ்ச்சியில் ஜெயசீலன் பேசிய தாவது:

தேனி மாவட்டத்தில் கிராமப்புற பள்ளியில் தமிழ் வழியில் படித் தேன். நான் எங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியும் கூட. எனது தந்தை கூலி வேலை பார்த்தார். என்னைப் போல் சாதாரண பின்னணியைக் கொண்ட பலர் ஐஏஎஸ் அதிகாரிகளாக உள்ளனர். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற அச்ச உணர்வை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்தும் நிறைய பேர் தேர்வில் தோல்வியடைகின்றனர்.

யுபிஎஸ்சி தேர்வை 8 லட்சம் பேர் எழுதுகின்றனர். அவர்கள் அனை வரும் போட்டியாளர்கள் அல்ல. விண்ணப்பதாரர்கள் மட்டுமே. தேர்வுக்காக அர்ப்பணிப்பு உணர் வோடு படிப்பவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே.

வெற்றிக்கான இலக்கு

தேர்வு எழுதும் 8 லட்சம் பேரில் 80 ஆயிரம் பேர் மட்டுமே போட்டியாளர்கள். எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும் எடுத்தவுடனேயே வெற்றிபெறும் வாய்ப்பு பல பேருக்கு கிடைக்காது. தேர்வுக்கு தயார் செய்யும்போதே, வெற்றிக்கான இலக்குடன் படிக்க வேண்டும். தோல்வியில் இருந்து அதில் செய்த தவறுகள் என்ன என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த முறை தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு பாடத்திட்டம் உள்ளது. அந்த பாடத் திட்டத்தின்படி படித்தால் வெற்றி பெறலாம். ஓராண்டில் 5 ஆயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும். அப்படியானால், நாளொன்றுக்கு 15 பக்கங்கள் படிக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட் போன் களை தேர்வுக்காக ஆக்கபூர்வ மாக பயன்படுத்தலாம். யுடியூபில் ஏராளமான பாடங்களை ஆன்லை னில் நடத்துகிறார்கள். அதை பயன் படுத்திக்கொள்ளலாம்.

நாளிதழ் வாசிப்பு

எந்தத் தேர்வுக்கு தயார் படுத்துவதாக இருந்தாலும் நடப்பு நிகழ்வுகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அதற்கு தினந்தோறும் செய்தித் தாள் படிக்க வேண்டும். இந்து ஆங்கிலம், இந்து தமிழ் நாளிதழ் களை தினமும் 2 மணி நேரம் வாசிக்க வேண்டும். தேர்வு குறித்த அச்ச உணர்வை போக்கி, தொடர்ச் சியாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கற்றுக்கொள்ள ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.தோல்வியைக் கண்டு துவண்டுவிடக் கூடாது. தேர்வில் வெற்றி பெறும் வரை இடைவிடாத முயற்சி தேவை.

மதிப்பெண் முக்கியம்

தொடர்ச்சியாக தேர்வுக்கு தயார் செய்தும், ஓரிரு கேள்விகளுக்கு சரியான விடை எழுதாமல் தோல்வி யடைந்தவர்கள் பலர் உள்ளனர். எனவே, ஒவ்வொரு மதிப்பெண் ணும் மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து படிக்க வேண்டும் என்றார் அவர்.

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி வாழ்த்துரை வழங்கி பேசும்போது, ``பயிற்சி செய், முயற்சி செய், விண்ணில்கூட கால் பதிக்கலாம் என்பதை மனதில் இருத்தி மாணவ, மாணவியர் செயல்பட வேண்டும்” என்று குறிப் பிட்டார். சங்கர் ஐஏஎஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர் சுவாஷிகா அறிமுகவுரையாற்றினார். இந்து தமிழ் முதுநிலை உதவி ஆசிரியர் முருகேஷ் தொகுத்து வழங்கினார்.

அதிகாரத்தை நோக்கிய வளர்ச்சி

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன்: மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களது ஆற்றல் என்ன என்பதை உணர வேண்டும். அந்த ஆற்றலை மேம்படுத்த வேண்டும். புத்தகங்களையும், பத்திரி கைகளையும் வாசித்து அதன் கருத்துகளை உள்வாங்க வேண்டும். அதிகாரத்தை நோக்கிய வளர்ச்சிக்காக இளைஞர்களை தயார்படுத்த இந்த கருத்தரங்கு தூண்டுகோலாக இருக்கிறது என்றார் அவர்.

900 மதிப்பெண்கள் எடுத்தால் வெற்றி

சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் வைஷ்ணவி: ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் 200-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றுவிடலாம். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் மொத்தம் 2,025 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். இதில், 900 முதல் 1,000 மதிப்பெண்கள் பெற்றால் சிவில் சர்வீஸ் பணியில் ஏதேனும் ஒன்றுக்கு தேர்வாகிவிடலாம். பெண்கள் அதிக அளவில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

உலகாளும் கனவு வேண்டும்

`இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ்: தமிழ் மாணவர்களை தலைமைத்துவத்தை நோக்கி நகர்த்தும் ‘இந்து தமிழ்’ நாளிதழின் அடுத்த முயற்சி இந்த நிகழ்ச்சியாகும். ஆளப்பிறந்தோம் என்று நாம் சொல்லும்போது ஆள்வது என்பது நாம் ஏனை யோரை கட்டி ஆள்வது என்ற வகையில் சொல்லப்படவில்லை. நாமும் அடிமைத்தளையிலி ருந்து மீண்டு, மற்றோரையும் அதிகாரப்படுத்துவது என்பதே ஆகும்.

ஒரு சமூகம் அரசியல் தலைமைத்துவத்தை நோக்கி நகர வேண்டும் என்றால் பொருளாதார தளத்திலும், அறிவுத்தளத்திலும் தலைமை பண்பை பெறவேண்டும். நமக்கு யார் வேலை கொடுப் பார்கள் என்கிற நிலையிலிருந்து, நாம் வேலைகளை உருவாக்கக் கூடிய நிலைக்கு உயர வேண்டும். வரலாற்றில் நாம் எந்த இடத்தில் இருந்தோம், இன்றைக்கு எந்த இடத்தில் இருக்கிறோம் என்று உணர வேண்டும். சுயஅறிதலும், சுயமதிப்பும் சேர்ந்தே வரலாற்றுப் பார்வையை உருவாக்கும். தமிழ் மாணவர்கள் உலகாளும் கனவுக்கு தயாராக வேண்டும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னி யாகுமரி மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற னர். கருத்துரையாளர்களிடம் அவர் கள் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றனர். ‘இந்து தமிழ்’ நடுப் பக்க ஆசிரியர் சமஸ் எழுப்பிய பல்வேறு பொதுநலன் சார்ந்த கேள்விகளுக்கு களக்காடு எஸ். சூர்யா, சிங்கம்பாறை பி. பன்னீர்செல்வம், கோவில்பட்டி எம்.காசிராஜன், கொற்கை எம்.அர்ச்சனா உள்ளிட்ட பல மாணவ, மாணவியர் பதில் அளித்து, தங்கள் கருத்துகளையும் தெரிவித்தனர்.

அவர்களில் சிறந்த கருத் துகளை தெரிவித்தவர்களுக்கு புத்தகங் கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒன்றரை மணி நேரத் துக்கு முன்னதாகவே ஆர்வத்துடன் வந் திருந்த மாணவியர் எம்.ராஜம்மாள், டி.திவ்யா, பி.கார்த்திகா, மாணவர் அஜித் குமார் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. பாளையங்கோட்டை தூய சவேரி யார் கல்லூரியில் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி கார்த்திகா என்ற சுதாவும் கவுரவிக்கப்பட்டார்.

நடைபெறும் இடங்கள்: மதுரை- ஆக்ஸ்ட் 25, திருச்சி- செப்டம்பர் 8, சேலம் - செப்டம்பர் 22, திருவண்ணாமலை - அக்டோபர் 20, கோயம்புத்தூர் - நவம்பர் 10, சென்னை -நவம்பர் 24, பாண்டிச்சேரி - டிசம்பர் 8

முன்பதிவுக்கு இலவசமாகப் பதிவு செய்துகொள்ள க்ளிக் செய்யவும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x