Published : 12 Aug 2019 08:10 AM
Last Updated : 12 Aug 2019 08:10 AM

காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவை முன்னிட்டு முறைகேடுகளை தடுக்கவும் கண்காணிக்கவும் குழுக்கள் அமைப்பு: பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரிப்பு

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைப வத்தை முன்னிட்டு பக்தர்கள் வரு கையை கண்காணிக்கவும், முறை கேடுகளை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாள் என்பதால் நேற்று 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர் கள் காஞ்சிபுரத்தில் குவிந்தனர்.

அத்திவரதர் வைபவத்தின் 42-ம் நாளான நேற்று அத்திவரதர் கத்திரிப் பூ, இளம் பழுப்பு நிறம் இணைந்த பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் குவிந்ததால் காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதி களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வெள்ளை கேட், வாலாஜாபாத், தூசி போன்ற பகுதிகளிலேயே நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அதி காலை 4 மணிக்கே டி.கே.நம்பி தெருவில் இருந்து பொது தரிசனத் துக்குப் பக்தர்கள் வரிசையில் நின்றனர்.

அத்திவரதர் வைபவத்தில் மிக முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில், முக்கிய பிரமுகர் நுழைவு வாயில்களில் அனுமதி அட்டை இல்லாதவர்களை அனுமதித்து காவல் துறையைச் சேர்ந்தவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி காவல் துறையைச் சேர்ந்த அலுவலருக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இங்கு முறைகேடு களை தடுக்கவும், இந்தப் பகுதி களை கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மிக முக் கிய பிரமுகர்கள் நுழைவு வாயி லில் காலை 4 மணி முதல் நண் பகல் 12 மணிவரை மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையிலும், நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணிவரை இருங் காட்டுகோட்டை சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் என்.குணசேகரன் தலைமையிலும், இரவு 7 மணி முதல் அதிகாலை 4 மணிவரை பெரும்புதூர் சிப்காட் நில எடுப்பு மாவட்ட வரு வாய் அலுவலர் பி.ராஜேசேகரன் தலைமையிலும் குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. அதேபோல் முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயிலிலும் இதுபோல் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல் ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை, அவசரத் தேவைகள், கிழக்கு கோபுர வாயில்களில் கண்காணிப்பு பணிகள், கோயிலுக்குள் இருக்கும் சிறிய கட்டுப்பாட்டு அறை உள் ளிட்டவற்றைக் கண்காணிக்கவும் தனித் தனியாக குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. அத்திவரதர் வைப வம் இறுதிக் கட்டத்தை எட்டுவதால் அதிகரிக்கும் கூட்டத்தைச் சமா ளிக்க ஆயத்தமாக இருக்கும்படி யும், அதற்குத் தகுந்த முன்னேற் பாடுகளை கவனிக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

முக்கிய பிரமுகர்கள் வரும் வரிசையில் தொடர்ந்து கூட்டம் அதிகமாக உள்ளது. அந்த வழியாக வருபவர்கள் சுவாமி தரிசனம் செய்ய 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது. மிக முக்கிய பிரமுகர்கள் வரிசையில் இப்போது அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் உள்ளே வருவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த வரிசையில் 20 முதல் 30 நிமிடங்களிள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. பொது தரிசனத்தில் 5 முதல் 6 மணி நேரத்துக்குள் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள்

அத்திவரதர் வைப வத்தை முன்னிட்டு போக்குவரத் தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள மக்களின் வீட்டுக்கு யாரேனும் உறவினர்கள் வந்தால் அவர் களின் கார்களும் ஊருக்கு வெளி யிலேயே நிறுத்தப்படுகின்றன. அதேபோல் மாங்கால் கூட்டுச் சாலையில் சிப்காட் பகுதி யில் இருந்து காஞ்சிபுரம் பைபாஸ் வழியாக வாகனங்கள் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட் டுள்ளது. அங்குள்ள தொழில் நிறு வனங்களுக்கு சென்று வருபவர் களின் கார்களும் வழியில் மடக்கப் படுவதால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ரங்கசாமி குளத்தில் இருந்து வரதராஜ பெருமாள் கோயில் வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு அந்தச் சாலையின் பெரும் பகுதி மக்கள் பொது தரிசனத்துக்கு செல்லும் வழியாக மாற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x