

சென்னை
பக்ரீத் பண்டிகையையொட்டி தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒரேகுலம், ஒரேகடவுள் என்ற உன்னத நோக்கம் கொண்ட, இஸ்லாமியமார்க்கம் சமூக ஒற்றுமையையும், சமுதாயநல்லிணக்கத்தையும் மக்களிடத்தில் உருவாக்கும் சிறந்தமார்க்கம். இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த அனைவரும், நலமுடனும், எல்லாவளமுடனும், சமவாய்ப்பும், சமஉரிமையும் பெற்றிட வேண்டுமென இஸ்லாமிய நண்பர்களுக்கு எனது தியாகத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சாந்தியும், சமாதானமும் மேலோங்கிட உழைப்போம். மனித உறவுகள் உன்னதம் பெற்றிட அன்பைவிதைப்போம். பல ஆண்டுகாலமாக நான் தேமுதிக சார்பில் இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து, குர்பானி வழங்கி, தியாகத்திருநாளை கொண்டாடி வருகிறேன். இதேபோல் இந்த ஆண்டு தேமுதிக மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் குர்பானி வழங்கி “இயன்றதை செய்வோம், இல்லாதவற்கே” என்ற கொள்கையோடு பக்ரீத்தை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.