கம்பம் மெட்டு சாலையில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு மர்மக் காய்ச்சல் உள்ளதா என்று சோதனை செய்யும் மருத்துவக் குழுவினர்.
கம்பம் மெட்டு சாலையில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு மர்மக் காய்ச்சல் உள்ளதா என்று சோதனை செய்யும் மருத்துவக் குழுவினர்.

கேரளாவில் பரவிவரும் மர்மக் காய்ச்சல்: தமிழக எல்லையில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு

Published on

கூடலூர்

கேரளாவில் மழை, வெள்ள பாதிப்பை தொடர்ந்து அங்கு மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து தேனி மாவட்ட தமிழக எல்லைகளில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரள பகுதிகளில் வைரஸ் மற்றும் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது.

இடுக்கி மாவட்டம், தமிழக எல்லைப் பகுதி என்பதால் தமிழகத்தில் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில் கம்பம் மெட்டு பழைய போலீஸ் சோதனைச் சாவடி, லோயர் கேம்ப் பேருந்து நிலையப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது.

கம்பம் மெட்டு சாலையில் உள்ள முகாமில் க.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கண்மலர் தலை மையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் பாபுராஜா, செவிலியர் தமிழ்செல்வி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சோதனை செய்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in