

திருப்பூர்
திருப்பூர் மாநகரில் கரையோர வீடு களுக்குள் மழை நீர் புகுந்ததால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்ட ணம் இல்லாமல் அடுக்குமாடி குடி யிருப்பில் வீடு வழங்க வேண்டு மென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங் களையடுத்து, திருப்பூர் மாவட்டத் திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. கோவை மாவட்டத்தில் நொய்யல் நீர் பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்ததால், திருப்பூர் மாநகரிலுள்ள நொய்யலில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் இரவு பெய்த மழையால், வள்ளுவர் தோட்டம் பகுதியில் வீடு களுக்குள் தண்ணீர் புகுந்தது. இத னால், பொருட்கள் சேதமடைந்தன.
தண்ணீர் புகுந்த 16 வீடுகளில் இருந்த 48 பேரை மீட்டு, கருவம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி யில் மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் தங்க வைத்தனர். நீர் வெளியேறியதையடுத்து, நேற்று காலை மீண்டும் வீடு திரும்பினர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, ‘பல ஆண்டுகளாக இங்குதான் வாழ்கிறோம். ஆட்சிகள் மாறினாலும், எங்களின் அவல நிலை மாறவில்லை. அடுக்கு மாடி குடியிருப்புகளில் எங்களை குடியமர்த்துவதாக, கடந்த முறை வெள்ளத்தின்போது கூறினார்கள்.
ஆனால், இன்றைக்கு வீடுகளுக் குள் வெள்ள நீர் புகுந்துவிட்ட நிலையிலும், வீடுகள் வழங்க ரூ. ஒரு லட்சத்து 30 ஆயிரம் கேட்கிறார்கள். எங்களால், அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது.
வீரபாண்டி பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட் டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு களில், எந்தவித கட்டணமும் இன்றி வீடுகள் வழங்க வேண்டும்' என்றனர்.
மழை அளவு (மி.மீ.)
திருப்பூர் வடக்கு - 2.40, அவிநாசி - 1, மூலனூர் - 2, பல்லடம் - 7, காங்கயம் - 3, தாராபுரம் - 4, திருமூர்த்தி அணை - 13, அமராவதி அணை - 12, உடுமலை - 10.60 என மாவட்டம் முழுவதும் 55 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரி 6.11.
போக்குவரத்து துண்டிப்பு
திருப்பூர் நொய்யல் ஆற்றில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால், அணைப்பாளையத்தின் தரைப் பாலம் 3-வது நாளாக நேற்றும் நீரில் மூழ்கியது. இதனால், 3-வது நாளாக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத் தப்பட்டு, போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல, திருப்பூர் ஈஸ்வரன் கோயில் பாலத் தின் மீதும் தண்ணீர் சென்றதால், அப்பகுதியில் 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
வீடுகள் சேதம்
அவிநாசி நம்பியாம்பாளையம் கிராமத்தில் காமாட்சி என்பவ ருக்கு சொந்தமான வீடும், குப்பாண் டாம்பாளையம் புது ஊஞ்சப்பாளை யத்தில் நைனான் என்பவரது வீடும் மழைக்கு சேதமடைந்தன.