கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை; 4 நாட்களில் மேட்டூர் அணை நிரம்புவதற்கு வாய்ப்புள்ளது- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை; 4 நாட்களில் மேட்டூர் அணை நிரம்புவதற்கு வாய்ப்புள்ளது- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்
Updated on
1 min read

திருவாரூர்

கர்நாடக மாநிலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இன்னும் 4 நாட்களில் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப் புள்ளது என வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் நேற்று அவர், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகாவின் குடகு, கபினி, ஹேரங்கி பகுதிகளிலும், கேரளா வின் வயநாடு பகுதியிலும் கடந்த 6-ம் தேதி முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் நிரம்பிவிட்டன. கேஆர்எஸ் அணை இன்று (ஆக.10) நள்ளிரவில் நிரம்புவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாகக் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வரும் 12-ம் தேதி வரை மிகக் கனமழையும், அதன் பின்னர் 15-ம் தேதி வரை கனமழையும், அதைத்தொடர்ந்து, இம்மாத இறுதிவரை மிதமானது முதல் சற்று கனமழையும் பெய்யும்.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்துகொண்டே இருக்கும். குறிப்பாக, வரும் 17-ம் தேதி வரை 10 முதல் 17 டிஎம்சி தண்ணீரும், அதன்பிறகு அக்டோபர் மாதம் வரை 4 டிஎம்சி தண்ணீரும், உபரி நீரும் மேட்டூருக்குத் தினமும் வருவதற்கு ஏற்ற அளவில் மழை பெய்வதற்கான சூழல் வானிலையில் தென்படுகிறது.

அதேபோல, வரும் 12-ம் தேதிக்கு மேல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப் புரம், திருவண்ணாமலை மாவட் டங்களிலும், 15-ம் தேதிக்கு மேல் காவிரி டெல்டா மாவட் டங்களிலும் வெப்பச் சலன மழை பெய்ய வாய்ப்புகள் நன்றாக உள்ளன.

எனவே, இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் பற்றாக்குறை முற்றிலும் இருக்காது. மேலும் தமிழக நீர்நிலைகளில், தண்ணீரை நிரப்பிக்கொள்ள இந்த ஆண்டு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு நீர்நிலைகளில் தண்ணீரை நிரப்புவதற்கு தற்போதே ஆலோசித்துவரும் நிலையில் பொதுமக்களும், தங் களுடைய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீரை நிரப்பு வதற்கு அரசுடன் ஒத்து ழைப்பதுடன், மழைநீரைச் சேமிக்க உரிய முயற்சிகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in