Published : 11 Aug 2019 09:33 AM
Last Updated : 11 Aug 2019 09:33 AM

மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே பல்லவர் வரலாற்றை விளக்கும் நவீன அருங்காட்சியகம்: தொல்லியல் துறை ஒப்புதல்

மாமல்லபுரத்தில் பல்லவர்களின் சிற்பக் கலையை பறைசாற்றும் கடற்கரை கோயில்.

கோ.கார்த்திக்

மாமல்லபுரம்

கடற்கரை கோயில் அருகே பல்லவ மன்னர்கள் மற்றும் மாமல்லபுர நகரின் பாரம்பரிய வரலாற்றை விளக்கும் தகவல்களுடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்க, தொல்லியல் துறையின் ஒப்புதல் கிடைத்துள்ளதால் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்ல புரம் நகரத்தில் ஆங்காங்கே பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையைப் பறைசாற்றும் வகை யில் குடைவரை சிற்பங்கள் அமைந் துள்ளன. மிகவும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய இத் தகைய பல்லவர் காலச் சிற்பங்கள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றவையாகும். மேலும், இந்த மாமல்லபுரம் உலக கைவினை நகரமாக அறிவிக்கப்பட்டு, இதற்கு புவிசார் குறியீடும் வழங் கப்பபட்டுள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க பாரம்பரிய கலைச் சின்னங்களை மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.

இந்தச் சிற்பங்களை கண்டு ரசிப்பதற்காகவே வெளிநாடு மற் றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணி கள் ஏராளமானோர் தொடர்ந்து வந்து செல்கின்றனர். இந்நிலை யில் இந்தக் கலைச் சிற்பங் களை, குடைவரை கோயில்களை தங்களது ஆட்சி காலத்தில் உருவாக்கிய பல்லவ மன்னர் களின் வரலாற்றை சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்வதற் கான வசதிகள் இதுவரையில் இல்லாமல் இருந்தது. பல்ல வர்களின் பாரம்பரியத்தையும் ஆட்சி முறையையும் சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் பல்லவ மன்னர்களின் வாழ்க்கை குறிப்புகள், குடைவரை சிற்பங்களின் சிறப்புகள் மற்றும் துறைமுகப் பட்டினமாக விளங்கிய மாமல்லபுரம் நகரின் பாரம்பரிய தன்மை ஆகியவற்றை விளக்கும் அருங்காட்சியகம் அமைக்க வேண் டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பல்லவர்களின் பாரம்பரிய வரலாற்றை, நவீன தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்து வதற்கான அருங்காட்சியகம் அமைக்க மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் முடிவு செய் தது.

இதைத் தொடர்ந்து மாமல்ல புரம் கடற்கரை கோயில் அருகே அருங்காட்சியக கட்டிடம் அமைத்து, இதுவரையில் தொல் லியல் துறை பாதுகாத்து பரா மரித்து வரும் கலைச் சின்னங்கள் மற்றும் வரலாற்று தகவல்களை நவீன முறையில் ஒலி - ஒளியுடன் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டது.

இந்த அருங்காட்சியகம் அமைப் பதற்கான திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடம் தயாரிக்கும் பணிகள் மத்திய நீர்வள அமைச்சகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் இந்த அருங் காட்சியம் அமைக்க தொல்லியல் துறையின் ஒப்புதல் அவசியம் தேவை என்பதால், அத்துறை யின் ஒப்புதலுக்காக விண்ணப் பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடற்கரை கோயில் அருகே அருங் காட்சியகம் அமைக்க தொல்லியல் துறை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மாமல்லபுரம் தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாமல்லபுரத்தின் பாரம்பரிய கலைச் சின்னங்கள் மற்றும் பல் லவர்களின் வரலாற்றை, சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே அருங்காட்சியகம் அமைக்க, டெல்லியில் உள்ள தொல்லியல் துறை தலைமை நிர் வாகம் துறைசார்ந்த ஒப்புதலை அளித்துள்ளது. இதையடுத்து, அருங்காட்சியக கட்டிடம் உள் ளிட்ட கட்டமைப்பு வசதிகளுக்கான பணிகளை, இந்திய ஆயில் ஃபவுண் டேசன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகளுக்கான திட்ட மதிப்பீடு, வரைபடம் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்ததும் அருங் காட்சியம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x