

கும்பகோணம்
இசையை பாதுகாத்து வளர்த்தது காவிரிப்படுகைதான் என்று சென்னை மியூசிக் அகாடமியின் தலைவர் ‘இந்து’ என்.முரளி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் ஜனரஞ்சனி சபாவில் சிட்டி யூனியன் வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் நினைவு 11-ம் ஆண்டு இசை விழாவை நேற்று தொடங்கி வைத்த அவர் பேசியதாவது:
கும்பகோணம் வட்டாரம் விவ சாய பகுதியாக இருந்தாலும் இங்கு தான் இந்தியாவின் பாரம்பரிய நுண் கலையான இசை தழைத் தோங்கியது. 18, 19-ம் நூற்றாண்டில் இப்பகுதி இசைக்கு மிகப்பெரிய சிம்மாசனத்தை அளித்து கவுரவித் தது. அந்த இசைப் பாரம்பரி யத்தை மராட்டிய அரசர்களும், அவர்களுக்குப் பிறகு வெகுஜன மக்களும் பாராட்டிப் பாதுகாத்து வந்தனர்.
20-ம் நூற்றாண்டில் சென்னை கர்நாடக இசையின் முக்கிய கேந்திர மாக மாறும் வரை கும்பகோணம் பகுதியின் இசைதான் எங்கும் புகழ்பெற்றிருந்தது. தஞ்சாவூர், கும்பகோணத்தை உள்ளடக்கிய காவிரிப்படுகை பகுதிதான் இசை யைப் பாதுகாத்து வளர்த்தது எனலாம்.
பெருமை சேர்த்த மூவர்
கர்நாடக இசையின் மும்மூர்த்தி கள் திருவாரூர், திருவையாறு பகுதிகளில் வாழ்ந்திருந்தாலும் கும்பகோணம் பகுதிக்கு மகாராஜ புரம் சந்தானம், செம்மங்குடி சீனிவாசஅய்யர் மற்றும் வயலின் வித்வான் ராஜமாணிக்கம் போன் றோர் பெருமை சேர்த்தனர்.
திருவையாறில் இன்றும் இசை விழாக்கள் நடத்தப்பட்டு அதில் பெரிய இசைக்கலைஞர்களும், வளரும் கலைஞர்களும் பாடி வருகின்றனர். இதை அங்குள்ள தியாக பிரம்ம மகோற்சவ சபை வளர்த்து, பாதுகாத்து வருகிறது என்றார்.
விழாவில் சிட்டி யூனியன் வங்கி யின் தலைவர் ஆர்.மோகன், சபா வின் உறுப்பினர் சங்கரன், தியாக பிரம்ம மகோற்சவ சபையின் உறுப்பினர் சுதாகர் மூப்பனார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக சபாவின் செயலாளர் ஜி.கே.பாலசுப்பிரமணியன் வர வேற்றார். நிறைவில் சபா உறுப் பினர் கே.எஸ்.கண்ணன் நன்றி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வேளுக் குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமியின் உபன்யாசம் நடை பெற்றது.